பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழகக் கலை வரலாறு : இசை -ஓவியம் - அணிகலன்கள்

255

பயிர்க்காட்சி, அது நிமிர்த்து வளர்ந்து நிற்குங்காட்சி, கதிர் வெளிவராததற்கு முன்புள்ள காட்சி, கதிர் வெளிப்பட்டுப் பூத்து நிமிர்ந்து காற்றில் அசையுங் காட்சி, மணிமுற்றின பயிர் தலைசாயுங் காட்சி, முழுவதும் முற்றிய பயிர் மஞ்சள் நிறமாக மாறிப் படுத்திருக்குங் காட்சி இவையெல்லாம் இயற்கைக் காட்சியில் ஈடுபட்டவருக்கு இன்பந் தருவன. இலக்கியக் கலைஞரும் காவியப் புலவருமான திருத்தக்கதேவர் இந்த இயற்கைக் காட்சியைக் கண்டு மகிழ்ந்தார். இக்காட்சிகளைக் கண்ட அவருடைய உள்ளத்திலே சில கருத்துக்கள் தோன்றின. வயல் காட்சியில் தாம் கண்ட கருத்துக்களை அமைத்துச் சொல்லோவியம் புனைந்து தருகிறார் தம்முடைய சீவக சிந்தாமணிக் காவியத்தில்.

"சொல்லருஞ் சூற்பசும் பாம்பின் தோற்றம்போல் மெல்லவே கருவிருந் தீன்று, மேலலார்

செல்வமே போல்தலை நிறுவித், தேர்ந்த நூற்

கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே.

சூல்பசும் பாம்பின் தோற்றம்போல்-பச்சைப் பாம்பு கருவுற்றி ருப்பது போல. கருக்கொண்ட பச்சைப் பாம்பின் தோற்றம் போல, கதிர் வெளிப்படுவதற்கு முன்னே நெற்பயிரின் தோற்றம் இருந்தது என்பது கருத்து. ஈன்று-கதிர் விட்டு. தலைநிறுவி-தலைநிமிர்ந்து. இறைஞ்சி- வணங்கி, சாய்ந்து.

கதிர்கள் பூத்துத் தலைநிமிர்ந்து நிற்பதும் காற்றில் கழன்றாடு வதும் ஆகிய காட்சி, கீழ்மக்கள் செல்வம் பெற்றால் அவர்கள் யாரையும் மதிக்காமல் இறுமாந்திருப்பதும் தலைகால் தெரியா மலிருப்பதும் போலக் காணப்பட்டது. முற்றின கதிர்கள் சாய்ந்து தலைவணங்கி இருக்கிற காட்சி, கற்றறிந்த அறிஞர் அடக்கமாக இருப்பதுபோன்று காணப்பட்டது. இவ்வாறு, நெற்பயிரில் தாம் கண்ட காட்சியையுங் கருத்தையும் திருத்தக்க தேவர் இச் செய்யுளில் கூறுகிறார். இச் செய்யுளில், கவிதைக்கு இருக்க வேண்டிய உண்மை, அழகு, இனிமை மூன்றும் இருப்பது காண்க.

ஓவியக் கலைஞரும் - சிற்பக் கலைஞரும் நெல்வயலின் இந்த அழகான காட்சிகளைக் கண்கவர் ஓவியமாகவும், சிற்பமாகவும் அமைத்துக் காட்ட இயலும். ஆனால், பூத்த நெற்கதிர்கள் மேலலார் செல்வம்போல் தலை நிறவி'யதும் மணிமுற்றிய கதிர்கள் ‘கல்விசேர்