பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை ஓவியம்

-

ஓவியம் - அணிகலன்கள் 259

ஒன்று.

“புவியினுக் கணியாய் ஆன்ற

பொருள் தந்து புலத்திற் றாகி

அவியகத் துறைகள் தாங்கி

ஐந்திணை நெறிய ளாவிக்

கவியுறத் தெளிந்து தண்ணென்

றொழுக்கமும் தழுவிச் சான்றோர்

கவியெனக் கிடந்த கோதா

விரியினை வீரர் கண்டார்.'

புகழ்பெற்ற கோதாவிரி ஆறு பாரதநாட்டின் பெரிய ஆறுகளில் று. இதனுடைய எழில் மிக்க இனிய இயற்கைக் காட்சிகளை ஓவியக் கலைஞர் கண்ணைக் கவரும் ஓவியமாக எழுதிக் காட்டலாம். ஆனால், புலவர் உவமையாகக் கூறுகிற கோதாவிரியாற்றையும் காவியப் புலவரின் கவிதையையும் எப்படிப் பொருத்திக் காட்ட இயலும்? “சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவிரி” என்பதில் சித்திரத்தில் எழுதிக் காட்ட ஒண்ணாத எத்தனையோ கருத்துகள் பொதிந்திருக்கின்றன. இவ்வாறு சொல்லோவியம் அமைப்பது காவியப் புலவருக்கு மட்டுமே யுரியது.

புல்லர்க்குச் சொன்ன பொருள்

அரக்கியாகிய தாடகையை இராமன் அம்பு எய்து கொன்றான். அவன் எய்த அம்பு தாடகையின் நெஞ்சில் பாய்ந்து ஊடுருவி வெளிப்பட்டு அப்பால் சென்றது. இதுதான் இராமாயணச் செய்தி. ஆனால், கம்பன் இச் செய்தியைக் கூறுகிற செய்யுளில் அரியதொரு கருத்தைப் புகுத்தி இச் செய்யுளுக்குத் தனிச் சிறப்புக் கொடுத்து விட்டான். தாடகையின் நெஞ்சில் புகுந்து வெளிப்பட்ட அம்பு, அறிவுடையோர் சொன்ன நன்மொழி அறிவில்லாதவர் மனத்தில் தங்காமல் அகன்று போய்விடுவது போல அகன்று போயிற்று என்று கூறுகிறார்:

66

"சொல்லொக்குங் கடிய வேகச் சுடுசரங் கரிய செம்மல்

99

அல்லொக்கும் நிறத்தி னாள்மேல் விடுதலும் வயிரக் குன்றக் கல்லொக்கும் நெஞ்சில் தங்கா தப்புறங் கழன்று 'கல்லாப் புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருளெனப்' போயிற் றன்றே. (பாலகாண்டம், தாடகைவதைப்படலம். (72)