பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-13

ஓவியக் கலைஞரும் சிற்பக் கலைஞரும் தாடகையின் நெஞ்சிலிருந்து அம்பு வெளிப்படுவதுபோல ஓவியந் தீட்டியும் சிற்பம் அமைத்துங் காட்டலாம். ஆனால், ‘புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருளெனப் போயிற்று' என்பதை எவ்வாறு காட்ட இயலும்? இது காவியப் புலவருக்கே யுரிய தனித் திறமையன்றோ?

யாரே வடிவினை முடியக் கண்டார்?

கம்பரின் இன்னொரு சொல்லோவியத்தைப் பார்ப்போம். இராமன் மிதிலை நகரத்தில் உலா வருகிறான். அவனைக் கண்ட மகளிர் அவனுடைய உடல் அமைப்பின் எழிலைக் எழிலைக் கண்டு வியந்தார்கள். ஆனால், அவர்கள் அவனுடைய முழுவுருவத்தின் வனப்பைக் காணாமல் ஒவ்வோர் உறுப்பை மட்டுங் கண்டு வியந்தார்கள். இப்படி வியந்தது, முழுமுதற் கடவுளின் முழு உருவத்தைக்காண முடியாத சமயங்கள் (மதங்கள்) அக் கடவுளின் ஒவ்வொரு குணத்தை மட்டுங் கூறுவதுபோல இருத்தது என்று கூறுகிறார். பலரும் அறிந்தது இந்தச் செய்யுள்.

"தோள்கண்டார் தோளே கண்டார், தொடுகழல் கமலம் அன்ன தாள்கண்டார் தாளே கண்டார், தடக்கைகண் டாரும் அஃதே, வாள்கண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்? ஊழ்கண்ட சமயத் தன்னான் உருவுகன் டாரை ஒத்தார்.

""

(பாலகாண்டம், உலாவியற் படலம் - 19) (ஊழ்கண்ட ஊழினால் கண்ட. அன்னான் உருவு

கடவுளுடைய உருவம்.)

இதில் கூறப்பட்ட ஊ ழ்கண் ட சமயத்தன்னான் உருவு கண்டாரை ஒத்தார்' என்பது ஓவியக் கலைஞர் எழுதிக் காட்ட முடியாத ஒன்று. சிற்பத்திலும் ஓவியத்திலுங் காட்ட முடியாதது.

பசையற்ற மனம்:

நீர் இல்லாமல் வரண்டுகிடக்கிற பாலைவனத்தைக் கம்பர் கூறுகிறார். பாலைவனத்தின் வரட்சியைத் துறவிகளின் மனத்துக்கும் வேசையரின் மனத்துக்குங் கம்பர் உவமை கூறுகிறார். வீடு பேற்றைக் கருதி உலகப்பற்றை விட்டுத் தவஞ் செய்கிற துறவியின் மனம் பசையற்றிருப்பது போலப் பாலைவனம் பசையற்று வரண்டு