பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள்

261

கிடக்கிறது. அன்றியும் பொருள் ஒன்றையே நோக்கமாகக் கொண்ட வேசையர் மனம் தம்மிடம் வந்து பொருள் கொடுப்பவரிடத்தில் அன்பு இல்லாமல் பசையற்றிருப்பது போலப் பாலைநிலம் வரண்டு பசையற்று இருந்தது என்று கூறுகிறார்.

66

“தாவரும் இருவினை செற்றுத் தள்ளரு மூவகைப் பகையரண் கடந்த முத்தியிற் போவது புரிபவர் மனமும், பொன்விலைப் பாவையர் மனமும்போல் பசையும் அற்றதே.

99

(பாலகாண்டம்-தாடகைவதைப் படலம்- 15)

(தாவரும்-துன்பம் வருவதற்குக் காரணமாகிய. இருவினை- நல்வினை. தீவினை. மூவகைப்பகை-காமம், வெகுளி, மயக்கமாகிய முப்பகை, புரிபவர்-செய்பவர். புரிபவர்-விரும்புகிறவர். துறவிகள் மனம் பற்றற்றது. விலைமாதர் மனம் அன்பற்றது.)

இந்த உவமையை ஓவியத்திலும், சிற்பத்திலும் காட்ட முடியாது. பொன்னே, மணியே:

காவிரிப்பூம் பட்டினத்தில் கோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமணம் சிறப்பாக நடந்தது. திருமணத்துக்குப் பிறகு இருவரும் தனித்திருத்து காதல் இன்பம் நுகர்ந்து உரையாடினார்கள். அவ்வமயம் கோவலன் கண்ணகியை வியந்து பாராட்டினான். கோவலன் பாராட்டியதைக் காவியப் புலவர் இளங்கோவடிகள் கவிதையாகத் தருகிறார் தம்முடைய சிலப்பதிகாரக் காவியத்தில்.

66

'மாசறு பொன்னே! வலம்புரி முத்தே!

காசறு விரையே! கரும்பே! தேனே! அரும்பெறற் பாவாய்! ஆருயிர் மருந்தே! பெருங்குடி வாணிகன் பெருமட மகளே! மலையிடைப் பிறவா மணியே என்கோ! அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ! யாழிடைப் பிறவா இசையே என்கோ!

(சிலம்பு, மனையறம் படுத்தகாதை (73-79)

பொருள் பொதிந்த அருமையான இந்தச் சொல்லோ வியத்தை ஓவியர் சித்திரமாகவும் ஓவியமாகவும் எழுதிக்காட்ட இயலுமோ? இயலாதே.