பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

கரும்பே! தேனே!

இலக்கணை என்னும் பெயருள்ள மணமகளைச்

சீவக

சிந்தாமணி காவியம் இவ்வாறு பாராட்டுகிறது.

"கரும்பே! தேனே! அமிர்தே! காமர் மணியாழே! அரும்பார் மலர்மேல் அணங்கே! மழலை யன்னமே! சுரும்பார் சோலை மயிலே! குயிலே! சுடர்வீசும் பெரும்பூண் மன்னன் பாவாய்! பூவூாய்! பிணைமானே!”

(இலக்கணையார் இலம்பகம். 76)

இந்த இனிய செய்யுளின் கருத்தை ஓவியர் எப்படிச் சித்திரம் தீட்ட முடியும்? கவிஞரின் கவிதைக்கே யுரிய தனிச் சிறப்பன்றோ இது! இளமையைத் தேடுகிறார்!:

இளமை கழிந்து மூத்து முதிர்ந்த கிழவர் திரைத்த தோலும் நரைத்த தலையும் தளர்ந்த உடம்பும் உள்ளவர். நிமிர்ந்து நிற்க முடியாமல் குனிந்து, கையில் உள்ள தடியைத் தரையில் ஊன்றி நடக்கிறார். குனிந்து நடக்கிற இவர், தரைமேல் விழுந்து போனது எதையோ தேடுகிறார் போலக் காணப்படுகிறார். இந்தக் கிழவரின் காட்சி, தம்மிடமிருந்து வீழ்ந்துபோன இளமையைத் தேடுகிறது போல் இருக்கிறது என்று கவிஞர் நகைச்சுவைபட வெகு நயமாகக் கூறுகிறார். “கம்பித்த காலன் கோலன்

66

கையன கறங்கு தண்டன்

கம்பித்த சொல்லன் மெய்யைக் கரையழி நரையுஞ் குடி வெம்பித்தன் இளமை மண்மேல்

விழுந்தது தேடு வான்போல்

செம்பிற்கும் பிளித்த கண்ணன்

சிரங்குனிந் திறங்கிச் செல்வான்.

முதுகு வளைந்து தரையைப் பார்த்துக் கோலூன்றித் தள்ளாடி நடக்கிற கிழவரின் ஓவியத்தை ஓவியக் கலைஞர் சிற்பமாகவும், சித்திரமாகவும் வெகு நன்றாக அமைத்துக் காட்ட முடியும். ஆனால், அவர் குனிந்து நடப்பது, 'விழுந்து போன தம்முடைய இளைமைப் பருவத்தைத்’ தேடி நடப்பது போல இருக்கிறது என்னுங் கருத்தை ஓவியத்திலும் சிற்பத்திலுங் காட்ட முடியாதே! இந்தக் கருத்தைச்