பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-13

துணைக் கருவிகளாக யாழ், வீணை, குழல், முழவு, தாளம் முதலியவை உள்ளன. யாழும் குழலும் கேட்பதற்கு இனிமை யானவை. ‘குழல் இனிது யாழினிது' என்றார் திருவள்ளுவர். பிடில் என்னும் இசைக்கருவியும் கேட்பதற்கு இனிமையானது. பிடில், யாழ் (வீணை), குழல் இவற்றைத் (வாய்ப்பாட்டில்லாமலே) தனியாகவும் இசைப்பதும் உண்டு. இக்காலத்தில் இசைத்தட்டுகளும் வானொலி நிலையங்களும் இருப்பதனாலே இசைக்கலை வளர்ந்து ஓங்கி வருகிறது. நடனம், நாட்டியம், கூத்து ஆகிய கலைகள் இசைக் கலையோடு தொடர் புள்ளவை. இசையுடன் பொருந்தின நடனத்தையும் கூத்தையும் ஒரே சமயத்தில் கண்ணால் கண்டும் காதால் கேட்டும் மகிழலாம்.

ஐந்தாவதாகிய காவியக்கலை மேற்கூறிய கலைகள் எல்லாவற்றிலும் மிக நுட்பமானது. காவியக் கலையைக் கண்ணால் கண்டு இன்புற முடியாது. காதினால் கேட்கக் கூடுமானாலும் கேட்டதனால் மட்டும் மகிழ முடியாது. காவியத்தின் பொ பொருளை மனத்தினால் உணர்ந்து அறிவினால் இன்புறவேண்டும். ஆகவே காவியக் கலையைத் துய்ப்பதற்கு மனவுணர்வு மிக முக்கியமானது. காவியக் கலையோடு தொடர்புடையது நாடகக்கலை; காவியமும் நாடகமும் ஒன்றுபடும்போது இவற்றைக் கண்ணால் கண்டும் காதால் கேட்டும் மகிழ்கிறோம்.

பழங்காலத் தமிழர் தமிழை மூன்று பிரிவாக ஆராய்ந்து வளர்த்தார்கள். ஆகவே அது முத்தமிழ் எனப்பெயர் பெற்றது. முத்தமிழ் என்பது இயல் இசை நாடகம் என்பவை. இயற்றமிழ் என்பதில் காவியக்கலையும் அடங்கும் இசைத்தமிழ் என்பது இசைக்கலையும் அடங்கும். இசைத்தமிழ் என்பது இசைக்கலை. இதனோடு யாழ். குழல், முழவு, தாளங்களும் இசைந்து நடக்கும். நாடகத் தமிழ் என்பது நாடகம். இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றையும் இயைத்து இயற்றப் பட்ட நூல் சிலப்பதிகாரம். முத்தமிழையும் அமைத்து எழுதப்பட்டதனாலே சிலப்பதிகாரம் முத்தமிழ்க் காவியம் என்று சொல்லப்படுகிறது.

நாடகக் கலையை, பார்க்கும் நாடகம், படிக்கும் நாடகம் என்று இரண்டாகப் பிரிக்கலாம். பார்க்கும் நாடகம் என்பது, நாடகத்தை மேடைமேல் நடிகர் நடித்துக் காட்ட அரங்கத்தில் இருந்து பார்த்து மகிழ்வது. படிக்கும் நாடகம் என்பது, நாடக நூலைக் படித்து மனத்தினால் உணர்ந்து மகிழ்வது. படிக்கும் நாடகத்தைப் பிறர் படிக்கக் கேட்டும் மகிழலாம். இக்காலத்தில் வானொலி வாயிலாக நாடகங்களைக் காதினால் கேட்டு மகிழ்கிறோம். பார்க்கும் நாடகத்தில்