பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசைக்கலை*

அழகுக் கலைகளில் நான்காவது இசைக்கலை. இதனை இசைத் தமிழ் என்றும் கூறுவர். இது காதினால் கேட்டு இன்புறத்தக்க இன்கலை. தமிழர் வளர்த்த இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்களில் இது ஒன்று. ஆகவே இது தமிழர் வளர்த்த கலைகளில் மிகப் பழமையானது.

இசைத்தமிழ் இலக்கிய நூல்களையும் இசைத்தமிழ் இலக்கண நூல்களையும் புலவர்கள் பழங்காலத்திலே எழுதியிருந்தார்கள். அவற்றில் சில இப்போது பெயர் தெரியாமலே மறைந்து விட்டன. மற்றும் சில பெயர் மட்டும் கேட்கப்படுகின்றன.

பரிபாடல்

சங்க காலத்திலே பரிபாடல் என்னும் இசைப் பாடல்கள் பல பாடப்பட்டிருந்தன. பரிபாடல்கள் இசைப்பாடல்கள் என்பதைப் பரிமேலழகர் உரையினால் அறிகிறோம். "பரிபாடல் என்பது இசைப்பாவாதலான், இஃது இசைப் பகுப்புப் படைத்த புலவரும் பண்ணுமிட்டே...” என்று எழுதி யிருப்பதனால் அறியலாம்.'

66

அவையாவன, கலியும் பரிபாடலும் போலும் இசைப் பாட்டாகிய செந்துறை மார்க்கந்தன வென்பது." இது, பேராசிரியர் உரை.2

2

யாப்பருங்கல விருத்தியுரை காரரும், பரிபாடல் இசைத் தமிழைச் சேர்ந்தது என்று கூறுகிறார். அவர் எழுதுவது :

"செந்துறை மார்க்கம் (இசைப்பாடல்) ஆமாறு... நாற்பெரும் பண்ணும் இருபத்தொரு திறனும் ஆகிய இசையெல்லாஞ் செந்துறை... செந்துறை என்பது பாடற்கேற்பது.... செந்துறை விரி மூவகைய : செந்துறையும், செந்துறைச் செந்துறையும், வெண்டுறைச் செந்துறையும் என. அவற்றுட் செந்துறைப் பாட்டாவன : பரிபாடலும் மகிழிசையும், காமவின்னிசையும் என்பன என்னை?

  • தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் (1956) எனும் நூலில் இடம் பெற்ற கட்டுரை.