பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

"தெய்வங் காம

மையில் பொருளாம் பரிபாடல்லே

99

மகிழிசை நுண்ணிசை யுரிபெரு மரபிற் காமவின் னிசையே யாற்றிசை யிவற்றைச் செந்துறை யென்று சேர்த்தினர் புலவர்' என்றாகலின். 3

அன்றியும், இப்போது கிடைத்துள்ள இருபத்தொரு பரிபாடல் களுக்கு, அப்பாட்டுகளைப் பாடிய புலவர் பெயர்களும் அப்பாட்டுக்குப் பண்வகுத்த இசைப் புலவர் பெயர்களும் பண் பெயரும் எழுதப்பட்டிருப்பதானலே, பரிபாடல்கள் இசைப்பாடல்கள் என்பதை ஐயமற உணரலாம். இப்பரிபாடல் இருபத்தொன்றுக்கும் பண் வகுத்த இசைப் புலவர்களின் பெயர்களாவன:

பெட்டனாகனார், கண்ணனாகனார், மருத்துவன் நல்லச்சுதனார், பித்தாமத்தர், நாகனார், நன்னாகனார், நல்லச்சுதனார். தமிழரில் நாகர் என்னும் பிரிவினர் பண்டைக்காலத்தில் இருந்தார்கள். அவர்கள் இசைப் பயிற்சியில் தேர்ந்தவர்களாயிருந்தனர்.

6

கணக்கற்ற பரிபாடல்கள் முற்காலத்தில் இருந்தன என்றும் அவற்றில் பெரும்பாலும் இப்போது இறந்துபட்டன என்றும் தெரிகின்றன. என்னை? இறையனார்? அகப்பொருள் உரையாசிரியர், தலைச் சங்கத்தைக் கூறுமிடத்தில், “அவர்களாற் பாடப்பட்டன எத்துணையோ பரிபாடலும் முதுநாரையும் முதுகுருகும் களரியாவிரையுமென இத் தொடக்கத்தன” என்று கூறுகிறார். பின்னர் கடைச்சங்க காலத்தைக் கூறுமிடத்தில், “அவர்களாற் பாடப்பட்டன நெடுந்தொகை நானூறும், குறுந்தொகை நானூறும், நற்றிணை நானூறும், புறனானூறும், ஐங்குறுநூறும், பதிற்றுப்பத்தும், நூற்றைம்பது கலியும் எழுபது பரிபாடலும், கூத்தும், வரியும், சிற்றிசையும், பேரிசையு மென இத் தொடக்கத்தன" என்று எழுதுகிறார்.

இவர் கூறிய முதற்சங்க காலத்து “எத்துணையோ பரி பாடல்களில்” இக்காலத்து ஒரு பாடலேனும் எஞ்சி நிற்கவில்லை; கடைச் சங்கத்தார் பாடிய “எழுபது பரிபாடல்களில்" இப்போது உருப்படியாக இருப்பது இருபத்தொரு பரிபாடல்களே. மற்றவை அழிந்து விட்டன.