பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -13

குமாரன் (சாரகுமாரன் என்றும் பெயர்) என்பவனுக்கு இசை கற்பிப்பதற்காக, சிகண்டி என்னும் முனிவர் இந்நூலை இயற்றினார் என்று அடியார்க்கு நல்லார் கூறுகிறார்.'

இசை நுணுக்கத்திலிருந்து நான்கு செய்யுள்களை அடியார்க்கு நல்லார் மேற்கோள் காட்டுகிறார்.1° அவர் மேற்கோள் காட்டும் செய்யுள்களில் ஒன்று இது:-

66

"OT GOTOOT?

செந்துறை வெண்டுறை தேவபா ணிய்யிரண்டும் வந்தன முத்தகமே வண்ணமே-கந்தருவத் தாற்றுவரி கானல் வரிமுரண் மண்டிலமாத்

தோற்று மிசையிசைப்பாச் சுட்டு

என்றார் இசை நுணுக்க முடைய சிகண்டியாரென்க

பஞ்சமரபு

இந்த இசைத் தமிழ் இலக்கண நூலைச் செய்தவர் அறிவனார் என்பவர். இந் நூலை அடியார்க்கு நல்லார் தமது உரையில் குறிப்பிடுகிறார். இந் நூல் செய்யுள் ஒன்றையும் தமது உரையில் 1மேற்கோள் காட்டுகிறார். அச் செய்யுள் இது:

11

66

‘என்னை?

செப்பறிய சிந்து திரிபதை சீர்ச்சவலை

தப்பொன்று மில்லாச் சமபாத-மெய்ப்படியுஞ்

செந்துறை வெண்டுறை தேவபாணி வண்ணமென்ப

பைந்தொடியா யின்னிசையின் பா.

என்றார் பஞ்சமரபுடைய அறிவனா ரென்னு மாசிரிய ரென்க. பதினாறு படலம்

இந்த இசைத் தமிழ் நூலைச் சிலப்பதிகார அரும்பத வுரையாசிரியர் தமது அரும்பத வுரையில் குறிப்பிடுகிறார்; அன்றியும் இந் நூலிலிருந்து ஒரு சூத்திரத்தையும் மேற்கோள் காட்டுகிறார்:12

66

'தெருட்ட லென்றது செப்புங் காலை

யுருட்டி வருவ தொன்றே மற்ற

வொன்றன் பாட்டு மடையொன்ற நோக்கின்

வல்லோ ராய்ந்த நூலே யாயினும்