பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள்

33

வல்லோர் பயிற்றுங் கட்டுரை யாயினும்

பாட்டொழிந் துலகினி லொழிந்த செய்கையும்

வேட்டது கொண்டு விதியுற நாடி.

எனவரும் இவை, இசைத் தமிழ்ப் பதினாறு படலத்துள் கரண வோத்துட் காண்க.

வாய்ப்பியம்

இந் நூலை இயற்றியவர் வாய்ப்பியனார் என்பவர். அவர் பெயரே இந் நூலுக்குப் பெயராயிற்று. இந்த நூலையும் இந் நூல் சூத்திரத்தையும் யாப்பருங்கல விருத்தியுரைகாரர் குறிப்பிடுகிறார். இந் நூலிலிருந்து மேற்படி உரையாசிரியர் மேற்கோள் காட்டுகிற சூத்திரங்கள் சிலவற்றை காட்டுவோம்:

66

‘பாலை குறிஞ்சி மருதஞ்செவ் வழியென நால்வகைப் பண்ணா நவின்றனர் புலவர்’”

என்றார் வாய்ப்பியனார். விளரி யாழோடைந்து மென்ப. இனிப் பண் சார்பாகத் தோன்றியன திறமாம். என்னை?

66

“பண்சார் வாகப் பரந்தன வெல்லாந்

திண்டிற மென்ப திறனறிந் தோரே.

என்றாராகலின். அத்திறம் இருபத்தொரு வகைய.

66

அராக நேர்திற முறழம்புக் குறுங்கலி

யாசா னைந்தும் பாலையாழ்த் திறனே.

66

66

'நைவளங் காந்தாரம் பஞ்சுரம் படுமலை மருள் வியற் பாற்றுஞ்

செந்திறமெட்டுங் குறிஞ்சியாழ்த் திறனே.

"நவிர்படு குறிஞ்சி

66

செந்திற நான்கும் மருதயாழ்த் திறனே.

'சாதாரி பியந்தை நேர்ந்த திறமே

பெயர் திறம் யாமை யாழ்

சாதாரி நான்கும் செவ்வழி யாழ்த் திறனே.

என்றார் வாய்ப்பியனார்.”13