பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள்

35

இசைத் தமிழ்ச் செய்யுட்டுறைக் கோவை

இப் பெயருள்ள இசைத் தமிழ் நூல் ஒன்று இருந்த தென்பதை. யாப்பருங்கலக்காரிகை உரைப்பாயிரத்தினால் அறிகிறோம். அவ் வுரைப்பாயிரம் வருமாறு:

66

'அற்றேல் இந்நூல் (யாப்பருங் கலக்காரிகை) என்ன பெயர்த்தோ எனின்.....இசைத் தமிழ்ச் செய்யுட்டுறைக் கோவையே. உரூபாவதாரத்திற்கு நீதகச் சுலோகமே போலவும் முதல் நினைப்பு உணர்த்திய இலக்கியத்தாய்ச்........ செய்யப்பட்டமையான்

யாப்பருங்கலக் காரிகை என்னும் பெயர்த்து.”

இதனால் அறியப்படுவது என்னவென்றால், யாப்பருங்கலம் என்னும் நூலுக்குப் புறனடையாக யாப்பருங்கலக் காரிகை எழுதப்பட்டதுபோல, இசைத் தமிழ் நூல் என்னும் பெயருடனிருந்த ஒரு முதல் நூலுக்குப் புறனடையாக இசைத்தமிழ்ச் செய்யுட்கோவை என்றும் இந் நூல் எழுதப்பட்டது என்பது தெரிகிறது. இப்புறனடை நூலில் முதனூலில் இருந்த பாட்டுக்களை உணர்த்தும் செய்யுட்களும் இருந்தன என்பது தெரிகிறது.

இசைக்கலை சாசனம்

அரசர்களும் செல்வர்களும் இசைக்கலைஞர்களைப் போற்றிய தோடு, அவர்களில் சிலர் தாமே பெரிய இசைக் கலைஞராகவும் இருந்தார்கள். அப்பர் சுவாமிகள் காலத்தில் இருந்த மகேந்திர வர்மன் என்னும் பல்லவ அரசன் (கி.பி. 600-630) சிறந்த இசைப் புலவனுமாக இருந்தான். இவன், புத்தம் புதிதாக ஒரு இசையை அமைத்தான். ஆகையினாலே இவனுக்குச் சங்கீர்ணஜாதி என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. இவன் காலத்திலே இசைக் கலையில் பேர்போன உருத்திரா சாரியார் என்பவர் ஒருவர் இருந்தார். உருத்திராசாரியார். மகேந்திர வர்மனுடைய இசைக் கலை ஆசிரியர் என்று கருதப் படுகிறார்.

இசைக்கலைஞனாகிய மகேந்திர வர்மன் இசைக்கலையைப் பற்றி ஒரு சிறந்த சாசனத்தைக் கல்லில் எழுதிவைத்தான். அந்தச் சாசனத்திற்கு இப்போது குடுமியாமலை சாசனம் என்பது பெயர். புதுக்கோட்டையைச் சேர்ந்த குளத்தூர் தாலுகாவில் குடுமியாமலை என்னும் குன்றின் மேலே சிகா நாத சுவாமி கோயில் இருக்கிறது. இந்தக்