பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

போலவே, இசைக்கலையையும் போற்றவில்லை. அக்காலத்தில் தமிழ் இசைவாணர், ஆதரிப்பாரற்றுத் தவித்தனர். தெலுங்குப் பாடல்களுக்குச் செல்வாக்கு ஏற்பட்டது. தமிழ் நாட்டிலே தெலுங்குப் பாடல்களுக்கு ஆதிக்கம் உண்டாயிற்று. இந்தப் பழக்கம் 19, 20-ம் நூற்றாண்டிலேயும் தொடர்ந்து வந்தது.

ம்

கி.பி. 19, 20-ஆம் ஆண்டுகளில் அரசியல் குழப்பங்கள் அடக்கப்பட்டு, நாடு ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்து அமைதியும் ஒழுங்கும் நாட்டில் நிலைபெற்ற பிறகும். மராட்டிய மன்னர், தெலுங்கு மன்னர், முகம்மதிய மன்னர்களின் அதிகாரங்கள் அடங்கி ஒழிந்த பின்பும், தமிழ் நாட்டிலே தெலுங்குப் பாடல்கள் பாடும் நிலை இருந்து வந்தது. இதன் காரணம் பரம்பரையாக இரண்டு மூன்று நூற்றாண்டு களாகத் தெலுங்குப் பாட்டையே பயின்று பாடிவந்த பாடகர், குருட்டுத் தனமாக அப் பாடல்களையே பாடிவந்ததுதான்.

இன்னொரு காரணம், இசையை வயிறு வளர்ப்பதற்காக ஒரு சூழலை உண்டாக்கிக் கொண்ட ஒருசிறு கூட்டம், தமிழ்ப் பற்று இல்லாமல், தமிழ்ப்பாடல்களைப் பாடாமல் தெலுங்குப் பாடல்களைப் பாடிவந்ததாகும்.

தமிழிசையின் மறுமலர்ச்சி

இவ்வாறு தமிழ் இசைப்பாடல்கள் போற்றப்படாமல் இருந்த நிலையை மாற்றித் தமிழ் இசைக்கு மறுமலர்ச்சி யுண்டாக்கிக் கொடுத்தவர் கலைவள்ளல் ராஜாசர் அண்ணாமலைச் செட்டியார் அவர்கள். இம் முயற்சியில் இப் பெரியாருக்குப் பேருதவியாக இருந்தவர் டாக்டர் ஆர். கே. சண்முகம் செட்டியார் அவர்கள்.

இப்பெரியார்களின் சிறந்த உயர்ந்த முயற்சியை எதிர்த்தவர்கள் தெலுங்கரும், மராட்டியரும், முகம்மதியரும் அல்லர். பின்னர் யார் என்றால், தமிழர் என்று சொல்லிக்கொண்டு, ஆனால் தமிழ்ப்பற்றுச் சிறிதும் இல்லாமல் எந்தவழியிலாவது வாழவேண்டும் என்னும் ஒரே கொள்கையையுடைய ஒரு சிறு கூட்டந்தான் தமிழ் இசை இயக்கத்தை எதிர்த்துப் பின்னர் அடங்கிவிட்டது.

ராஜாசர் அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் தமிழிசைச் சங்கம் அமைத்தும், தமிழிசைக் கல்லூரி நிறுவியும், இசைத் தமிழ்