பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை - ஓவியம் - அணிகலன்கள்

47

போற்றப்பட்டிருந்தது. பழந்தமிழ் நூல்களிலே இக்கருவி பெரிதும் பாராட்டிக் கூறப்படுகிறது. பழந்தமிழர்களால் மிகச் சிறந்த இசைக் கருவியாகப் போற்றப்பட்டது.

6

உருவ அமைப்பில் யாழ்க்கருவி வில் போன்றது, யாழுக்கு வீணை யென்ற பெயரும் பண்டைக் காலத்தில் வழங்கிவந்தது. பழைமை வாய்ந்ததான புத்த ஜாதகக் கதை யொன்றிலே வில் வடிவ மான யாழ்க் கருவி, வீணை என்று கூறப்பட்டுள்ளது. “நாரத வீணை நயந்தெரி பாடல்” என்று சிலப்பதிகாரத்தில் கூறியது, இப்போது வழங்கும் வீணையை யல்ல; வில் வடிவமான யாழைத் தான் வீணை என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

யாழ் வாசிப்பதில் வல்லவரான பாணர் என்னும் மரபினர் தமிழ்நாட்டில் இருந்தனர். இவர்களுக்கு யாழ்ப்பாணர் என்பது பெயர். இவர்கள் பண்டைக் காலத்திலே சமுதாயத்தில் உயர் நிலையில் இருந்தவர்கள். அரசர் செல்வர் முதலியவர்களின் அரண்மனையில் யாழ் வாசித்தும் இசைபாடியும் தொழில் புரிந்தவர். இப்பொழுது இலங்கையின் வட பகுதியாகிய யாழ்ப் பாணம் என்னும் ஊர் பண்டைக் காலத்திலே, இசைப் புலமை வாய்ந்த யாழ்ப்பாணன் ஒருவனுக்கு ஒரு அரசனால் பரிசாக வழங்கப்பட்டதென்றும், யாழ்ப்பாணன் பரிசாகப் பெற்றபடியால் அவ் வூருக்கு யாழ்ப்பாணம் என்னும் பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர்.

பண்டைத் தமிழக்திலே யாழும் குழலும் சிறந்த இசைக் கருவிகளாக வழங்கி வந்தபடியினாலேதான் திருவள்ளுவரும், "யாழ் இனிது குழல் இனிது." என்று கூறினார். பலவிதமான யாழ்க் கருவிகளைப் பற்றியும் அக் கருவியைப் பற்றிய செய்திகளையும் சிலப்பதிகாரத்திலும், அதற்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையினும் விரிவாகக் காணலாம். அன்றியும், முத்தமிழ்ப் பேராசிரியர் உயர்திரு விபுலாநந்த அடிகளார் இயற்றிய யாழ் நூலிலும் காணலாம்.

u

யாழ் வாசித்து இசை பாடுவதில் வல்லவரான பாணர் என்னும் மரபினர் பிற்காலத்தில் அருகிவிட்டனர். திருஞான சம்பந்தர் இருந்த கி.பி. 7-ஆம் நூற்றாண்டிலே பேர் பெற்ற யாழாசிரியர் ஆக இருந்தவர் திருநீலகண்ட யாழ்ப்பாணர். அவருக்குப் பிறகு 9-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவர். பாணபத்திரர் என்பவர். யாழ் வாசிப்பதிலும் இசை பாடுவதிலும் வல்லவரான வல்லவரான இவர், முதலில் முதலில் வரகுண