பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு :

இசை - ஓவியம் - அணிகலன்கள்

-

மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் 1930-1980 இடைப்பட்ட காலங்களில் பல்வேறு துறைகள் தொடர்பாக தொடர்ந்து ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதி வந்துள்ளார். ஒரு குறிப்பிட்ட தலைப்பின் கீழ் அத்துறை தொடர்பான விவரங்களைத் தேடித் தருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். குறிப்பிட்ட மன்னர் ஒருவர் குறித்த நூலாக இருக்கும் பட்சத்தில் அக்காலத்திய சிற்பம், இசை, கட்டிடடக் கலை ஆகிய பிறவற்றையும் தொகுத்து வழங்கினார். இந்தத் தொகுதியில், மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் பல்வேறு இடங்களில் பேசியுள்ள இசை ஓவியம் – அணிகலன் ஆகியவை குறித்த செய்திகள் ஒருங்கே தொகுத்துத் தரப்படுகின்றன. இதன் மூலம் தமிழ்ச் சமூக வரலாற்றில் மேற்குறித்த துறைகள் தொடர்பான தகவல்களைப் பெற முடிகிறது. இத்தொகுப்பில் தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் (1956) நுண்கலைகள் (1967) என்னும் அவரது நூல்களில் காணப்படும் செய்திகள் பெரிதும் இடம்பெற்றுள்ளன.

அவர்

'அழகுக் கலைகள்’என்னும் சொல்லாட்சியை உருவாக்கியுள்ளார். கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, காவியக்கலை ஆகிய ஐந்தும் அழகுக்கலைகள் ஆகும் என்று மயிலை சீனி. வரையறை செய்கிறார். இத்தொகுதியில் இடம் பெற்றிருக்கும் பொருண்மைகளை பின்வரும் வகையில் தொகுத்துக் கொள்ளலாம்.

விபுலானந்தர் கருத்துக்களை அடியொற்றி அழகுக்கலைகள் எனும் தொடருக்கான வரையறையும் விளக்கமும் அளிக்கப் படுவதைக் காண்கிறோம்.

தமிழில் உருவான இசைக்கலைக்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. தொல்பழம் பிரதிகளின் மூலம் கிடைக்கும் இசை தொடர்பான விவரங்கள்த் தொகுத்து இப்பகுதியில் வழங்கப்