பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை ஓவியம்

-

ஓவியம் - அணிகலன்கள் 51

தெய்வவிருத்தி என்று கூறப்படும். தெய்வங்கள் தமது பகைவரான அவுணர்களுடன் போர் செய்து வென்று, அவ் வெற்றியின் மகிழ்ச்சி காரணமாக ஆடிய ஆடல்கள் இவை.

இப் பதினோராடல்களின் பெயர்களாவன:

1. அல்லியம், 2. கொடுகொட்டி. 3. குடை. 4. குடம். 5. பாண்டரங்கம். 6. மல், 7. துடி. 8. கடையம். 9. பேடு. 10. மரக்கால்.11. பாவை. இவற்றில் முதல் ஆறும் நின்று ஆடுவது. பின்னுள்ள ஐந்தும் வீழ்ந்து ஆடுவது. என்னை?

66

"அல்லியங் கொட்டி குடைகுடம் பாண்டரங்கம்

66

மல்லுடன் நின்றாடல் ஆறு

99

'துடி கடையம் பேடு மரக்காலே பாவை வடிவுடன் வீழ்ந்தாடல் ஐந்து.

என்பதனால் அறியலாம்.

இந்த ஆடல்களை ஆடத் தொடங்குமுன்னர், முக நிலை யாகத் திருமாலுக்கும் சிவபெருமானுக்கும் திங்களுக்கும் தேவபாணி பாடப்படும். அப் பாடல்களை அடியார்க்கு நல்லார் தமது உரையில் மேற்கோள் காட்டியிருக்கிறார்.23 அப் பாடல்கள் இவை:

66

திருமால்

எண்சீர் கொச்சக வொருபோகு.

"மலர்மிசைத் திருவினை வலத்தினில் அமைத்தவன் மறிதிரைக் கடலினை மதித்திட வடைத்தவன்

இலகொளித் தடவரை கரத்தினில் எடுத்தவன்

இனநிரைத் தொகைகளை யிசைத்தலில் அழைத்தவன் முலையுணத் தருமவள் நலத்தினை முடித்தவன் முடிகள்பத் துடையவன் உரத்தினை யறுத்தவன் உலகனைத் தையுமொரு பதத்தினில் ஒடுக்கினன் ஒளிமலர்க் கழல்தரு வதற்கினி யழைத்துமே.

பண்-கௌசிகம்.

99

தாளம்: இரண்டொத்துடைத் தடாரம்.