பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -13

6. மல். மல்லாடல் என்பது, கண்ணன் வாணன் என்னும் அவுணனுடன் மற்போர் செய்து அவனைக் கொன்றதைக் காட்டும்

கூத்து.

66

‘அவுணற் கடந்த மல்லி னாடல்

என்பது சிலப்பதிகாரம். “வாணனாகிய அவுணனை வேறற்கு மல்லனாய்ச் சேர்ந்தாரிற் சென்று அறை கூவி உடற் கரித்தெழுந்து அவனைச் சேர்ந்த அளவிலே சடங்காகப் பிடித்து உயிர் போக நெரித்துத் தொலைத்த மல்லாடல்" என்பது அடியார்க்கு நல்லார் உரை. மல்லாடல் ஐந்து உறுப்புகளையுடையது.

7. துடி. துடியாடல் என்பது, கடலின் நடுவில் ஒளிந்த சூரபதுமனை முருகன் வென்ற பிறகு, அக்கடலையே அரங்கமாகக் கொண்டு துடி (உடுக்கை) கொட்டியாடிய கூத்து.

“மாக்கடல் நடுவண்

நீர்த்திரை யரங்கத்து நிகர்த்துமுன் நின்ற

சூர்த்திறங் கடந்தோன் ஆடிய துடி."

என்பது சிலப்பதிகாரம்.31

“கரிய கடலின் நடுவு நின்ற சூரனது வேற்றுருவாகிய வஞ்சத்தை யறிந்து அவன் போரைக் கடந்த முருகன் அக்கடல் நடுவண் திரையே யரங்கமாக நின்று துடிகொட்டி பாடிய துடிக் கூத்து அடியார்க்கு நல்லார் உரை.

என்பது

8. கடையம்: கடயக் கூத்து என்பது. வாணனுடைய சோ என்னும் நகரத்தின் வடக்குப் புறத்தில் இருந்த வயலில், இந்திரனுடைய மனைவியாகிய அயிராணி. உழத்தி உருவத்தோடு ஆடிய உழத்திக் கூத்து.

66

வயலுழை நின்று வடக்கு வாயிலுள் அயிராணி மடந்தை யாடிய கடையம்”

என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

66

32

வாணனுடைய பெரிய நகரின் வடக்கு வாயிற்கண் உளதாகிய வயலிடத்தே நின்று அயிராணி என்னும் மடந்தை ஆடிய கடையம் என்னும் ஆடல்” என்பது அடியார்க்கு நல்லார் உரை.