பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை - ஓவியம் - அணிகலன்கள்

ஓவியம் - அணிகலன்கள் 57

இதற்கு உறுப்புகள் ஆறு.

9. பேடு. பேடியாடல் என்பது,

காமன் தன் மகனான

அநிருந்தனைச் சிறை மீட்பதற்காக வாணனுடைய சோ என்னும் நகரத்தில் பேடியுருவங் கொண்டு ஆடிய ஆடல்.

"ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக் காமன் ஆடிய பேடியாடல்.

என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.33

66

""

ண்மைத் தன்மையிற்றிரிந்த பெண்மைக் கோலத்தோடு காமனாடிய பேடென்னும் ஆடல். இது தனது மகன் அநிருத்தனைச் சிறை மீட்டுக் காமன் சோ நகரத்தாடியது' என்று உரை கூறுகிறார் அடியார்க்கு நல்லார்.

இது நான்கு உறுப்புகளை உடையது.

காவிரிப்பூம் பட்டினத்தில் 1800 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திர விழா நடந்தபோது. அந்நகரத் தெருவில் இப்பேடிக் கூத்து ஆடப்பட்டதென்றும் அதனை மக்கள் கண்டு மகிழ்ந்தனர் என்றும் மணிமேகலை கூறுகிறது. அப்பகுதி இது:

"சுரியற் றாடி மருள்படு பூங்குழல்

பவளச் செவ்வாய்த் தவள வொண்ணகை ஒள்ளரி நெடுங்கண் வெள்ளிவெள் தோட்டுக் கருங்கொடிப் புருவத்து மருங்குவளை பிறைநுதல் காந்தளஞ் செங்கை யேந்திள வனமுலை

அகன்ற அல்குல் அந்நுண் மருங்குல் இகந்த வட்டுடை யெழுதுவரிக் கோலத்து வாணன் பேரூர் மறுகிடை நடந்து நீள்நிலம் அளந்தோன் மகன்முன் னாடிய பேடிக் கோலத்துப் பேடுகாண் குநரும்"

9934

10. மரக்கால். மரக்கால் ஆடல் என்பது மாயோள் ஆகிய கொற்றவை முன் நேராக எதிர்த்துப் போர் செய்ய முடியாத அவுணர், வஞ்சனையால் வெல்லக் கருதி பாம்பு தேள் முதலியவற்றைப் புகவிட. அவற்றைக் கொற்றவை மரக்காலினால் உழக்கி ஆடிய ஆடல். இதனைக்