பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

"காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅள்

மாயவள் ஆடிய மரக்கால் ஆடல்

என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.35

இதற்கு. "காயும் சினத்தையுடைய அவுணர் வஞ்சத்தால் செய்யும் கொடுந்தொழிலைப் பொறாளாய் மாயோளால் ஆடப்பட்ட மரக்காலென்னும் பெயரையுடைய ஆடல்” என்று உரை கூறுகிறார் அடியார்க்கு நல்லார்.

இவ் வாடலுக்கு நான்கு உறுப்புகள் உண்டு.

11. பாவை. பாவைக் கூத்து என்பது, போர் செய்வதற்குப் போர்க்கோலங் கொண்டுவந்த அவுணர் மோகித்து விழுந்து இறக்கும்படி, திருமகள் ஆடிய கூத்து. இதனை,

"செருவெங் கோலம் அவுணர் நீங்கத் திருவின் செய்யோள் ஆடிய பாவை

என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.36

66

அவுணர் வெவ்விய போர்செய்தற்குச் சமைந்த போர்க் கோலத்தோடு மோகித்து வீழும்படி கொல்லிப் பாவை வடிவாய்ச் செய்யோளாகிய திருமகளால் ஆடப்பட்ட பாவை யென்னும் ஆடல்,” என்பது அடியார்க்கு நல்லாருரை.

இப் பாவைக் கூத்து மூன்று உறுப்புகளை யுடையது.

இப் பாவைக் கூத்தை, பொம்மையாட்டம் என்னும் தோற் பாவைக் கூத்தென்று மயங்கக்கூடாது. பாவைக் கூத்து வேறு. பொம்மைக் கூத்து வேறு.

இந்தப் பதினோருவகையான ஆடல்களையும் அந்தந்தப் பாத்திரத்தின் ஆடை அணிகளை அணிந்து, மாதவி என்னும் கலைச்செல்வி மேடையில் ஆடினாள் 1800 ஆண்டுகளுக்கு முன்னர் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

இப் பதினோரு ஆடல்களின் விவரங்களையும் அவற்றின் உறுப்புகளையும் அவற்றிற்குரிய பாடல்களையும் அப்பாடல்களுக் குரிய பக்க வாத்தியங்களையும் மற்றச் செய்திகளையும் விளங்கக் கூறிய சில நூல்களும் பண்டைக்காலத்தில் இருந்தன என்று