பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-13

பட்டுள்ளது. இசைக் கலையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் இந்நூல் விரிவாகப் பேசுகிறது.

தமிழ் மரபில் இலக்கியப் பிரதிகளில், ஆடல் மரபு குறித்து விரிவாகப் பதிவு செய்திருப்பதைக் காண்கிறோம். சிலம்பாட்டம், கூத்து ஆகிய அனைத்தும் தமிழ்க் காவியங்களில் காணக் கிடக்கின்றன. இசை தொடர்பான செய்திகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

ஓவியக் கலை மரபு தமிழ்ச் சூழலில் எவ்வகையில் செயல்பட்டன? என்பது தொடர்பான உரையாடல்கள் இந்நூலின் மூலம் அறிகிறோம்.

காவியக்கலை என்பது நுண்கலையைச் சேர்ந்தது என்னும் உரையாடல் இத்தொகுப்பில் விரிவாக மேற்கொள்ளப் பட்டிருப்பதைக் காண்கிறோம்.

பல்வேறு அணிகலன்கள் தமிழ்ச் சமூகத்தில் நடைமுறையில் இருந்ததை அறியமுடிகிறது. பாணர்கள் பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் இசைக் கலையை வளர்த்தனர். பரிபாடல் எனும் இசைப்பாடல் மரபு இருந்தது, பல்வேறு இசைநூல்கள் தமிழில் இருந்தன, அவை மறைந்துவிட்டன. 13 ஆம் நூற்றாண்டில் வெளிவந்த ‘சங்கீத ரத்நாகரம்’ எனும் நூல் தமிழ் இசை மரபை உள்வாங்கி வடமொழியில் எழுதப்பட்ட நூல். கர்நாடக இசை மரபிற்கு இந்நூல் மூலமாக அமைகிறது.

தமிழில் உருவான கீர்த்தனை மரபு மிகவும் வளமாகச் செயல்பட்டது. இருபதாம் நூற்றாண்டில் தமிழிசை மறுமலர்ச்சி இயக்கம் உருவானது.

தமிழ் ஆடல் மரபு வளமானது. பல்வேறு வகையான ஆடல் மரபுகள் இருந்தன. இம்மரபுகள் தொடர்பான பல்வேறு கூத்து நூல்கள் இருந்தன. இம்மரபிலிருந்து பரதநாட்டியம் உருவானது. சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை மூலம் பல்வேறு ஆடல் மரபுகளை அறிய முடிகிறது.

தமிழ்ச் சமூகத்தில் சிற்பக்கலைக்கும் ஓவியக் கலைக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததைக் காண முடிகிறது. சுவர் ஓவிய மரபு தமிழில் மிக வளமாக இருந்தது. காலந்தோறும் சுவர் ஓவிய மரபுகள் மாறி மாறி வளர்ந்து வந்திருப்பதைக் காணமுடிகிறது. ஓவியம் குறித்து