பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

செயன்முறை என்னும் நாடகத் தமிழ் நூல் ஒன்று இருந்தது. இந் நூலை யாப்பருங்கல உரையாசிரியர் குறிப்பிடுகிறார்." இந் நூலிலும் கூத்துகளைப்பற்றிய செய்திகள் கூறப்பட்டிருக்க வேண்டும்.

குரவைக் கூத்து

கூத்துகளில் குரவைக்கூத்து என்னும் கூத்தும் உண்டு. அது மகளிர் ஆடுவது. எழுவர், எண்மர். ஒன்பதின்மர் மகளிர் வட்டமாக நின்று கைகோத்து ஆடுவது.

66

'குரவை என்பது எழுவர் மங்கயைர் செந்நிலை மண்டலக் கடகக் கைகோத் தந்நிலைக் கொட்பநின் றாடலாகும்.

என்பது சூத்திரம். இது வரிக்கூத்துகளில் ஒன்று. குரவைக் கூத்து குன்றக் குரவை என்றும் ஆய்ச்சியர் குரவை என்றும் இருவகைப் படும்.

குன்றக் குரவை என்பது குறமகளிர் (குறிஞ்சி நிலத்தில் வாழ்பவர்) முருகனுக்காக ஆடும் கூத்து. இதற்குரிய பாடல்களைச் சிலம்பு: வஞ்சிக்காண்டத்தில் குன்றக்குரவையில் காண்க.

ஆய்ச்சியர் குரவை என்பது ஆயர் மகளிர் (முல்லை நிலத்தில் வாழ்வோர்) திருமாலுக்காக ஆடும் கூத்து.

தரையில் வட்டம் வரைந்து அதனைப் பன்னிரண்டு அறை களாகப் பங்கிட்டு குரவை ஆடும் மகளிரை அவ்வறைகளில் நிறுத்தி, அவருக்கு முறையே குரல். துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்று எழுவருக்கும் ஏழு பெயரிட்டு இசைபாடி ஆடுவது. இது இசையும் கூத்தும் பொருந்தி ஆடப்படும் இனிய ஆடல் என்று தோன்றுகிறது. இவ்வாடலுக்குரிய குறவைச் செய்யுள்களையும் சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவையில் காணலாம். இதுபற்றி ஆழ்ந்து ஆராய விரும்புவோர் அங்குக் காண்பாராக.

பரத நாட்டியம்

பாரத தேசத்திலே பல நாட்டியக் கலைகள் உள்ளன. அவை களில் பரத நாட்டியம். கதக், கதகளி, மணிபுரி நாட்டியங்கள் பேர் போனவை. இவைகளிலும் தலை சிறந்த உயர்ந்த கலையாக விளங்குவது பரத நாட்டியம். இதைத் தமிழனின் தற்புகழ்ச்சி என்றோ