பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

செய்து அரசன் அமைச்சன் புரோகிதன் சேனாபதி முதலியோர் சூழ இருந்து தலைக்கோல் எடுத்துப் பட்டத்து யானையின் கையில் கொடுத்து வலமாக வந்து தேரின்மேலே நின்ற ஆடல் ஆசிரியன் கையில் கொடுப்பார்கள். ஆடலாசிரியரின் தலைக்கோலை வாங்கித் தேரில் வைத்து நகரத்தில் வலமாக வருவான். வலம் வந்தபிறகு அரங்கத்திலே தலைக்கோல் வைக்கப்படும். பிறகு. ஆடல்பாடல்கள் நிகழும்.

இச்செய்தியைச் சிலப்பதிகாரம் கூறுகிறது. "பேரிசை மன்னர் பெயர்புறத் தெடுத்த

சீரியல் வெண்குடைக் காம்பு நனி கொண்டு கண்ணிடை நவமணி யொழுக்கி மண்ணிய நாவலம் பொலந்தகட் டிடைநிலம் போக்கிக் காவல் வெண்குடை மன்னவன் கோயில் இந்திர சிறுவன் சயந்தன் ஆகென வந்தனை செய்து வழிபடு தலைக் கோல் புண்ணிய நன்னீர் பொற்குடத் தேந்தி மண்ணிய பின்னர் மாலை யணிந்து நலந்தரு நாளாற் பொலம்பூண் ஓடை அரசுவாத் தடக்கையில் பரசினர் கொண்டு முரசெழுந் தியம்பப் பல்லியம் ஆர்ப்ப அரைசொடு பட்ட ஐம்பெருங் குழுவும் தேர்வலஞ் செய்து கவிகைக் கொடுப்ப

ஊர்வலஞ் செய்து புகுந்துமுன் வைத்து

945

6

இந்தச் செய்தியையே செயிற்றியம் என்னும் நூலும் கூறுகிறது.

66

"பிணியுங் கோளும் நீங்கிய நாளால்

அணியுங் கவினும் ஆசற வியற்றித் தீதுதீர் மரபிற் றீர்த்த நீரான்

மாசது தீர மண்ணுநீர் ஆட்டித்

தொடலையும் மாலையும் படலையுஞ் சூட்டிப்

பிண்ட முண்ணும் பெருங்களிற்றுத் தடக்கை மிசைக்

கொண்டு சென்றுறீஇக் கொடியெடுத் தார்த்து

முரசு முருடும் முன்முன் முழங்க

அரசு முதலான ஐம்பெருங் குழுவும்