பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

"பாலை படுமலை பண்ணி யதன்கூட்டங்

கோலஞ்செய் சீறியாழ் கொண்டபின்-வேலைச் சுவையெலாந் தோன்ற வெழீஇயினாள் சூழ்ந்த வவையெலா மாக்கி யணங்கு

99

இதன் பொருள்: படுமலைப் பாலையையும் அல்லாத பாலை களையும் ஆக்கி அழகு செய்த சிறிய யாழைத் தன்கையிலே கொண்ட பின்பு, முன்பு சொன்ன திரிபாலைத் திறமெல்லாம் அமுதச் சுவைதோன்ற வாசித்தாள், சுற்றிய அவையிலுள்ளாரை யெல்லாம் தன் வசத்தாராக்கி, அணங்கு என்றவாறு. அணங்கு எழீஇனாள்.

பாடல் வென்றி

பாடல் வென்றியைப் பற்றிக்கூறும் செய்யுள்:

66

46

'வண்டுறையுங் கூந்தல் வடிக்கண்ணாள் பாடினாள் வெண்டுறையும் செந்துறையும் வேற்றுமையாக் கண்டறியக் கின்னரம் போலக் கிளையமைந்த தீந்தொடையாழ் அந்நரம்பும் அச்சுவையும் ஆய்ந்து.

இதன் பொருள்: வண்டுதங்கும் கூந்தலினையும் வடுவகிர் போன்ற கண்ணினையும் உடையாள் பாடினாள்: வெண்டுறைப் பாட்டும் செந்துறைப் பாட்டும் வேறுபாடு தோன்ற, அறிவர் மனத்தால் கண்டறியக் கின்னரத்தின் ஓசைபோல, இணை கிளை பகை நட்பு இனம் என்னும் வகையின் ஐந்தாவதாகிய கிளைத் தொடர்ச்சி யமைந்த தித்தித்த கோவையினையுடைய யாழிற் செய்யப்பட்ட அழகிய நரம்பும் மந்தர மத்திம தாரமும் ஆராய்ந்து - என்றவாறு. ஆய்ந்து பாடினாள்.'

ஆடல் வென்றி

9947

இசைத் தழிழோடு தொடர்புடையது ஆடல்கலை. இதன் வென்றியையும் பெருந்திணைப் படலம் கூறுகிறது. அச்செய்யுள் இது:

66

'கைகால் புருவங்கண் பாணிநடை தூக்குக்

கொய்பூங் கொம் பன்னாள் குறிக்கொண்டு-பெய்பூப் படுகளிவண் டார்ப்பப் பயில்வளைநின் றாடும் தொடுகழல் மன்னன் துடி.

இதன் பொருள்: கையாலும், காலாலும், புருவத்தாலும், கண்ணாலும், தாளத்தையும் செலவையும் இசையையும் கொய்யப்