பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள் - 7

தமிழில் பல்வேறு நூல்கள் இருந்ததைக் காண்கிறோம். தமிழ்க் காவிய நூல்களில், தமிழ்ச் சமூகத்தில் செயல்பட்ட பல்வேறு ஓவிய மரபுகள் குறித்தச் செய்திகள் பதிவாகியிருப்பதைக் காண்கிறோம்.

சித்தன்னவாசல், காஞ்சிபுரம், தஞ்சாவூர், மதுரை ஆகிய பிற இடங்களில் ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்விடங்களில் காணப்படும் ஓவியங்கள், தமிழ் ஓவிய மரபின் அடையாளங்களாக உள்ளன. இவை பற்றிய விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக அறிய முடியவில்லை.

ம்

ம்

காவியங்களை நுண்கலை மரபிற்குள் இணைத்து மயிலை சீனி. பேசுகிறார். காவியத்தில் பேசப்படும் செய்திகள் நுண்கலை மரபோடு இணைந்திருப்பதாகக் கூறுகிறார். சிற்பங்களும் ஓவியங்களும் தங்களது கற்பனைத் திறனை வெளிப்படுத்துவது போல், காவியங்களை உருவாக்குபவர்களும் கலைஞர்களே. காவியப் புலவர்களின் சொல்லோவியங்கள், வரையப்பட்ட ஓவியங்களுக்கு இணையாகக் கருதப்பட வேண்டும்.

சிற்பக்கலை, ஓவியக்கலை, காவியக்கலை மரபோடு இணைத்து அணிகலன்களையும் அணுக வேண்டும் என்னும் கருத்துடையவர் மயிலை சீனி. அவர்கள். தமிழில் உள்ள அணிகலன்கள் குறித்த விரிவான ஆய்வு மேற்கொள்ளப் பட்டிருப்பதாகக் கூறமுடியாது.

தமிழ்க்கலை வரலாறு முழுமையாக இன்னும் எழுதப்பட வில்லை. மயிலை சீனி. அவர்கள் பல்வேறு செய்திகளை பல்வேறு கோணங்களில் பல்வேறு இடங்களில் பதிவு செய்திருக்கிறார். அவை ஓரளவுக்கு இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழ்ச் சமூகத்தின் கலை வரலாறு எழுதுவோருக்கு இத்தொகுப்பு உதவலாம்.

இத்தொகுப்புகள் உருவாக்கத்தில் தொடக்க காலத்தில் உதவிய ஆய்வாளர்கள் மா. அபிராமி, ப. சரவணன் ஆகியோருக்கும் இத்தொகுதிகள் அச்சாகும் போது பிழைத்திருத்தம் செய்து உதவிய ஆய்வாளர்கள் வி. தேவேந்திரன், நா. கண்ணதாசன் ஆகியோருக்கும் நன்றி. வீ. அரசு

சென்னை – 96 ஏப்ரல் 2010

தமிழ்ப் பேராசிரியர் தமிழ் இலக்கயித்துறை சென்னைப் பல்கலைக்கழகம்