பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

சாரங்கதேவர் காலத்துக்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னே இந்தச் சாசனம் எழுதப்பட்டது. சாரங்கதேவர் 13 ஆம் நூற்றாண்டில் இருந்த வர். சங்கீதரத்நாகரத்துக்கு முன்னே நாரதசிக்ஷை என்னும் ஒர் இசை நூல் இருந்தது. அந்த நூலைச் சங்கீத ரத்நாகரத்தில் மேற்கோள் காட்டி யிருக்கிறார் சாரங்கதேவர். ஆனால், நாரதசிக்ஷை எப்போது இயற்றப் பட்டதென்று தெரியவில்லை. சாரங்கதேவர் தமது சங்கீதரத்நாகரத்தில் மேற்கோள் காட்டுகிற நாரதசிக்ஷை ஏழு ராகங்களை மட்டும் கூறுகிறது. ஆகவே, நாரதசிக்ஷை கூறுகிற இசையும், குடுமியாமலைச் சாசனம் கூறுகிற இசையும் ஒற்றுமையுள்ளவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சங்கீத ரத்நாகரமோ பல இராகங்களைக் கூறுகிறது. நாரதசிக்ஷை என்னும் நூல், நாரத முனிவர் இயற்றிய ஒரு இசை நூலைப் பின்பற்றி எழுதப்பட்டது என்று கருதப்படுகிறது.

நாரத சிக்ஷையும் அதனுடன் ஒற்றுமைப்படுகிற குடுமியாமலை இசைச்கலைச் சாசனமும் தமிழ்இசை மரபைச் சேர்ந்தவை என்று தெரிகின்றன. என்னை? வடநாட்டு இசை மரபு ஹனுமந்தரைப் பின்பற்றியது என்றும், தென்னாட்டு இரைமரபு நாரதரைப் பின்பற்றியது என்றும் கர்ண பரம்பரையாகச் சொல்லப்படுகிறது. அன்றியும் நாரதமுனிவர் தமிழ் இசைநூல் செய்தவர் என்பது தமிழ் நூல்களினாலும் தெரிகிறது:

66

“நாரத வீணை நயந்தெரி பாடல்’

என்று, சிலப்பதிகாரம் 6 ஆவது காதை கூறுகிறது. “யாழா சிரியனாகிய நாரத முனிவனின் யாழின் ஏழிசை இன்பம்" என்று இதற்கு அடியார்க்கு நல்லார் உரை எழுதுகிறார்.

குடுமியாமலைச் சாசனமும் வீணையைப்பற்றிய இசையைத்

தான் கூறுகிறது என்பது ஈண்டுக் கருதத்தக்கது.

நாரதமுனிவர் பஞ்சபாரதீயம் என்னும் இசைத்தமிழ் நூலைச் செய்தார் என்று அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரைப்பாயிரத்தில் கூறுகிறார்; "இசைத் தமிழ் நூலாகிய பெருநாரை பெருங்குருகும் பிறவும் தேவவிருடி நாரதன் செய்த பஞ்சபாரதீய முதலா வுள்ள தொன்னூல்களிறந்தன” என்று அவர் எழுதுவது காண்க.

மேலும் சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவை ஒன்றன் பகுதி “கதிர் திகிரியான் மறைத்த" என்னும் செய்யுளின் ஈற்றடி, "முதுமறை தேர்