பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

என்கிறார்.

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

“பண்ணின் தமிழிசை பாடலின் பழவேய் முழவதிரக் கிண்ணென்று இசைமுரலுந் திருக்கேதாரம்

என்று கூறுகிறார்.

“பண்ணார் மொழிப் பாவையார் ஆடுந்துறையூர்”

என்றும் கூறுகிறார்.

இவர்காலத்தில் கோயில்களில் ஆடல் பாடல் நிகழ்த்துவதற்கும் திருத்தொண்டுகள் செய்வதற்கும் உருத்திர கணிகையர் இருந்தார்கள் என்பதைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாற்றிலிருந்தும் தெரிகிறது. தமிழ்நாட்டுத் திருக்கோயில்களுக்குச் சென்று இயற்றமிழோடு இசைத் தமிழையும் கலந்து மனமுருகப் பாடிப் பக்தி செலுத்தினார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

பாணபத்திரர், ஏமநாதர்

அக்காலத்தில் இருந்த இன்னொரு இசைப் புலவர் பத்திரர் என்பவர். இசைக்கலையில் வல்லவர்களான பாணர் இனத்தைச் சேர்ந்தவராகையினாலே இவரைப் பாணபத்திரர் என்றும் கூறுவர். பாண்டிநாட்டிலே இருந்த இவர், வரகுண பாண்டியன் அவைக்களத்தில் இசைப் புலவராக இருந்தார். இந்த இசைக்கலைஞர் சொக்கப் பெருமானிடம் பக்தியுடையவர். அக்காலத்திலே, பாண்டி நாட்டிற்கு வடக்கேயுள்ள சோழநாட்டிலே இருந்த பேர் போன இசைப்புலவர் ஏமநாதர் என்பவர். இவருக்கு இசைவல்லான் என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. இவரும் பாணர் இனத்தைச் சேர்ந்தவரே.

8

இசைவல்லான் ஏமநாதன், பாண்டிநாட்டிற்கு வந்து வரகுணபாண்டியனைக் கண்டு இசைபாடி பரிசுபெற்றார். அன்றியும், இசைக்கலையில் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இலர் என்றும் பெருமிதத்துடன் பாண்டியனிடம் கூறினார். பாண்டியன், தன்னுடைய இசைப்புலவரான பாணபத்திரரை அழைத்து, ஏமநாதரை இசையில் வெல்லக் கூடுமா என்று கேட்டான். பாணபத்திரர், ஏமநாதரை இசையில் வெல்வேன் என்று கூற, பாண்டியன் இசையரங்கிற்கு நாள் குறித்தான்.

66

“சுந்தர அணிஅணிந்து தொகுமுடிச் சுற்றும் சுற்றிச்

சுந்தரப் பொட்டும் இட்டுச் சிறந்த குப்பாயம் இட்டுச்