பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள் 85

சந்தனம் இட்டு வீணை தண்டுயாழ் கையில் வாங்கி வந்த தந்திரி திருத்திப் பாடினார் மயங்க எங்கும்.

99

ஏமநாதருடைய சீடர்கள் மதுரை வீதிகளில் சென்று இனிய இசை பாடி, தமது புலமையைக் காட்டினார்கள். அவர்கள் பாடிய இசையைக் கேட்டுப் பாணபத்திரர் பெரிதும் வியந்தார். வியந்து மனத்தில் அச்சங் கொண்டார். “சீடர்களின் இசைப்பாடல் இவ்வளவு சிறந்ததாக இருக்கிறதே. ஏமநாதரின் இசைக் கலை எவ்வளவு சிறந்ததாக இருக்கும். அவரை இசையில் வெல்வது எவ்வாறு” என்றுன்னி ஏங்கினார். தாம் நாள்தோறும் இசைபாடி வழிபடும் சொக்கப் பெருமானிடம் சென்று தமக்கு இசைப் போட்டியில் வெற்றி அருள வேண்டும் என்று வேண்டினார்.

இசைப் போட்டி நிகழ்வதற்கு முந்திய நாள், ஏமநாதர் தங்கியிருந்த வீதிவழியே விறகு வெட்டி யொருவன் வந்தான். அப்போது மாலை நேரம். வந்த விறகு வெட்டி, விறகுச் சுமையை ஏமநாதர் தங்கியிருந்த கூட்டுத் திண்ணையின் மேல் வைத்துவிட்டுச் சற்று இளைப்பாறினான். சற்று இளைப்பாறிய பின்னர், மெல்ல ஓர் இசை பாடினான்.

66

'ஆதாரமாகி நின்றான் அரையி ருட்போதில் மெல்லச் சாதாரி என்னும் கானம் பாடினான் தரணியுய்ய'

அவன் பாடியது சாதாரிப் பண். அதாவது முல்லைப் பண். க்காலத்தில் தேவகாந்தாரம் என்று கூறப்படுகிற இராகம். விறகு வெட்டி பாடிய முல்லைப் பண் மிகச் சிறப்பாக இருந்தது. அதைக் கேட்டுக் கொண்டு வீட்டிற்குள்ளிருந்த இசை வல்லானாகிய ஏமநாதரே. வியப்படைந்தார். அவர் வெளியே வந்து விறகு வெட்டியைக் கண்டபோது மேலும் வியப்படைந்தார். இவனா இவ்வளவு நன்றாகச் சாதாரி பாடினான்! அவனை நோக்கி “நீ யார்? எங்கு வந்தாய்?” என்று

வினவினார்.

66

ஐயா! நான் ஏழை. பாணபத்திரரிடம் சிறிது காலம் இசை பயின்றேன். எனக்கு இசை வராது என்ற என்னைத் தள்ளி விட்டார். நான் விறகு விற்று வயிறு பிழைக்கிறேன்” என்று கூறினான் விறகு வெட்டி.

66

6

"நீ இப்பொழுது பாடினாயே, அந்த இசையை இன்னொரு முறை பாடு" என்றார் ஏமநாதர்.