பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

ஆதிகாலத்தில் குழல், மெல்லிய மூங்கிற் குழாயினால் செய்யப்பட்டது. பிறகு இக்கருவி, சந்தனம் கருங்காலி செங்காலி என்னும் மரங்களினாலும் செய்யப்பட்டது. திண்மையும் உறுதியும் உள்ள இந்த மரங்களைக் கடைந்து வங்கியம் அமைத்தார்கள். வெண்கலத்தினாலும் வங்கியம் செய்யப்பட்டது.

"ஓங்கிய மூங்கில் உயர்சந்து வெண்கலமே பாங்குறு செங்காலி கருங்காலி-பூங்குழலாய் கண்ணன் உவந்த கழைக்கிவைக ளாமென்றார் பண்ணமைந்த நூல்வல்லோர் பார்த்து”.

வங்கியங்களில் மூங்கிலால் செய்தது உத்தமம் என்றும் வெண்கலத்தால் செய்தது மத்திமம் என்றும் மரங்களால் செய்தது அதமம் என்றும் கூறப்படும்.

“இக்காலத்துக் கருங்காலி செங்காலி சந்தனம் இவற்றால் கொள்ளப்படும். கருங்காலி வேண்டுமென்பது பெருவழக்கு. இவை கொள்ளுங்கால் உயர்ந்த ஒத்த நிலத்திற் பெருக வளர்ந்து நாலுகாற்று மயங்கின் நாதமில்லை யாமாதலான் மயங்கா நிலத்தின் கண் இளமையும் நெடும் பிராயமுமின்றி ஒரு புருடாயுப்புக்க பெரிய மரத்தை வெட்டி ஒரு புருடாகாரமாகச் செய்து அதனை நிழலிலே ஆற இட்டு வைத்துத் திருகுதல் பிளத்தல் போழ்ந்துபடுதல் இன்மையையறிந்து ஓர்யாண்டு சென்றபின் இலக்கணவகையான் வங்கியம் செய்யப்படும். என்னை?

'உயர்ந்த சமநிலத் தோங்கிக்கால் நான்கின் மயங்காமை நின்ற மரத்தின்-மயங்காமை முற்றிய மாமரந் தன்னை முதறடிந்து குற்றமிலோ ராண்டிற் கொளல்'

என்றாராகலின்”. (சிலம்பு, அரங்கேற்று காதை. அடி 26. அடியார்க்கு நல்லார் உரை)

வங்கிய இலக்கணம்:

"நீளம் இருபது விரல், சுற்றளவு நாலரை விரல். இது துளையிடுமிடத்து நெல்லரிசியில் ஒரு பாதி மரனிறுத்திக் கடைந்த வெண்கலத்தாலே அணைசு பண்ணி இடமுகத்தை யடைத்து வலமுகம் வெளியாக விடப்படும். என்னை?