பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை -ஓவியம் - அணிகலன்கள் - - 91

‘சொல்லு மிதற்களவு நாலைந்தாஞ் சுற்றளவு

நல்விரல்கள் நாலரையாம், நன்னுதலாய்!-மெல்லத் துளையளவு நெல்லரிசி தூம்பிட மாய

வளைவலமேல் வங்கிய மென்?

என்றாராகலின்”.

"நீளம் இருபது விரல், சுற்றளவு நாலரை விரல். இது துளையிடுமிடத்து நெல்லரிசியில் ஒரு பாதி மரம் நிறுத்திக் கடைந்து வெண்கலத்தாலே அணைசு பண்ணி இடமுகத்தை அடைத்து வலமுகம் வெளியாக விடப்படும்".

(சிலம்பு, ஆய்ச்சியர் குரவை, 'கொல்லையஞ் சாரல் குருந்தொசித்த மாயவன்' என்னுஞ் செய்யுளுக்கு அடியார்க்கு நல்லாரின் உரை.)

66

துளையள விலக்கணம்:

‘அளவு இருபது விரல். இதிலே தூம்பு முகத்தின் இரண்டு நீக்கி முதல்வாய்விட்டு, இம்முதல்வாய்க்கு ஏழங்குலம் விட்டு வளைவாயினு மிரண்டு நீக்கி நடுவினின்ற ஒன்பது விரலினும் எட்டுத் துளையிடப்படும். இவற்றுள் ஒன்று முத்திரையென்று கழித்து நீக்கி நின்ற ஏழினும் ஏழுவிரல் வைத்து ஊதப்படும். துளைகளின் இடைப் பரப்பு ஒரு விரலகலம் கொள்ளப்படும். என்னை?

'இருவிரல்க ணீக்கி முதல்வா யேழ் நீக்கி

மருவு துளையெட்டு மன்னும்-பெருவிரல்கள் நாலஞ்சு கொள்க பரப்பென்ப நன்னுதலாய் கோலஞ்செய் வங்கியத்தின் கூறு'

என்றாராகலின்”. (சிலம்பு அரங்கேற்று காதை 26-ஆம் அடி, அடியார்க்கு நல்லார் உரை.)

“இனி வங்கியத்தின் துளையளவு: நீளம் இருபது விரல். இதிலே தூம்பு முகத்தின் இரண்டு விரல் நீக்கி முதல்வாய் விட்டு அம்முதல் வாய்க்கு ஏழங்குலம் விட்டு வளைவாயினும் இரண்டு விரல் நீக்கி நடுவு நின்ற ஒன்பது விரலினும் எட்டுத் துளையிடுக. இவற்றுள் ஒன்று முத்திரை யென்று கழித்து நீக்கி நின்ற ஏழினும் ஏழுவிரல் வைத்து ஊதப்படும். துளைகளின் பரப்பு ஒரு விரலகலங் கொள்ளுக".