பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

(சிலம்பு ஆய்ச்சியர் குரவை. 'கொல்லையஞ் சாரல் குருந் தொசித்த மாயவன்' என்னுஞ் செய்யுளுக்கு அடியார்க்கு நல்லாரின் உரை.)

"இவ்வங்கியம் ஊதுமிடத்து வளைவாய் சேர்ந்த துளையை முத்திரை யென்று நீக்கி முன்னின்ற ஏழினையும் ஏழு விரல் பற்றி வாசிக்க”.

“ஏழு விரலாவன: இடக்கையிற் பெருவிரலும் சிறு விரலும் நீக்கி மற்றை மூன்று விரலும், வலக்கையிற் பெருவிரலொழிந்த நான்கு விரலும் ஆக ஏழு விரல் மென்க. என்னை?

'வளைவாய் அருகொன்று முத்திரையாய் நீக்கித் துளையேழின் நின்ற விரல்கள்-விளையாட் டிடமூன்று நான்குவல மென்றார்காண் ஏகா வடமாரு மென்முலையாய் வைத்து’

என்றாராகலின்”.

"இவ்வங்கியத்து ஏழு துளைகளில் இசை பிறக்கு மாறு: அஃது எழுத்தாற் பிறக்கும். எழுத்து: சரிகம பதநி என்பன. இவ்வேழு எழுத்தினையும் மாத்திரைப் படுத்தித் தொழில் செய்ய இவற்றுள்ளே ஏழிசையும் பிறக்கும்”.

66

'ஏழிசையாவன: சட்சம், ரிடபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிடாத மென்ன. இவை பிறந்து இவற்றுள்ளே பண்கள் பிறக்கும் என்னை?

'சரிகமபதநி யென் றேழெழுத்தாற் றானம்

வரிபரந்த கண்ணினாய்! வைத்துத்-தெரிவரிய

ஏழிசையுந் தோன்று மிவற்றுள்ளே பண்பிற்கும்

சூழ் முதலாஞ் சுத்தத் துளை'

என்றாராகலின்”.

இசைபாடும்போது இசைப் பாட்டும் தண்ணுமையும் குழலும் யாழும் இசைந்து நிகழ வேண்டும். அல்லவா? அவ்வாறு இசைவதற்குப் பாடகனும் தண்ணுமையோனும் குழலோனும் யாழோனும் (இக்காலத்து வயலின் அல்லது வீணை) தத்தம் கலையில் வல்லவராயிருத்தல்