பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

பட்டினப்பாலை மண்டபம்

105

இடம் : திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே 12 மைலில் உள்ள திருவெள்றைக் கிராமம்.

பதிப்பு: "செந்தமிழ்” நாற்பத்தொன்றாந் தொகுதி.

விளக்கம் : பாண்டியள் சோழநாட்டின்மேல் படையெடுத்துச் சென்று, சோழ அரசரின் கட்டடங்களை எல்லாம் தகர்த்து அழித்தான் என்றும், பட்டினப்பாலை என்னும் செய்யுளைப் பண்டைக்காலத்தில் கரிகாற்சோழன் மேல் உருத்திரன் கண்ணனார் பாடி யரங்கேற்றிய நினைவுக்காக அமைக்கப்பட்ட பதினாறுகால் மண்டபத்தைமட்டும் அழிக்காமல் விட்டுவைத்தான் என்றும் இந்தச் சாசனச் செய்யுள் கூறுகிறது.

சாசனச் செய்யுள்

வெறியார் தளவத்தொடைச் செயமாறன் வெகுண்டதொன்றும் அறியாத செம்பியன் காவிரி நாட்டி லரமியத்துப்

பறியாத தூணில்லை கண்ணன்செய் பட்டினப் பாலைக்கன்று நெறியால் விடுந்தூண் பதினாறுமே யங்கு நின்றனவே.

குறிப்பு :- மாறன் - மாறவர்மன் சுந்தரபாண்டியன். அரமியம் அரண்மனை. கண்ணன்செய் பட்டினப்பாலை သ கடியலூர் ருத்திரங்கண்ணனார் என்னும் புலவர் கரிகாற் பெருவளத்தான் என்னும் சோழன்மீது பாடிய பட்டினப்பாலை என்னும் செய்யுள். அச்செய்யுளைப் பாடிப் பெற்ற பரிசில், பதினாறு நூறாயிரம் பொன் என்று கலிங்கத்துப் பரணி (இராச பாரம்பரியம் 22) கூறுகிறது. பட்டினப்பாலையை அரங்கேற்றியதன் நினைவுக் குறியாகச் சோழநாட்டில் பதினாறுகால் மண்டபம் ஒன்று இருந்ததையும், மற்றக் கட்டடங்களை அழித்த பாண்டியன் இதனைமட்டும் அழிக்காமல் விட்டுவைத்ததையும் இச்செய்யுள் கூறுகிறது.

இவ்வாறு செய்த பாண்டியன், மாறவர்மன் சுந்தரபாண்டியன் (முதலாமவன்). இவனைச் சோணாடு வழங்கியருளிய ஸ்ரீ சுந்தர பாண்டியதேவர் என்றும் கூறுவர். இவன் கி.பி. 1216 முதல் 1238 வரையில் அரசாண்டான். இவனால் தோல்வியடைந்த சோழன் மூன்றாம் இராசராசன் ஆவான். மாறவர்மன் சுந்தரபாண்டியன், சோழ நாட்டுக் கட்டடங்களை அழித்த செய்தி அவனுடைய சாசனத்திலும்