பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

113

திருக்கை மலரிலேய் நான் நீர்வார்த்த குடிக்காடு இரட்டைப்பாடி கொண்ட சோழ வளநாட்டு வடகோ நாட்டு உறத்தூர்க் கூற்றத்துப் பையூருடையான் திருச்சிற்றம்பல முடையான் வேதவன முடை யானை நான் கவி பாடி பாடின கவிக்கு எனக்கு பரிசில் தந்த தன்காணியான குடிக்காடு இரும்பூதிக்கு வடபொற்கெல்லை நெடுங்கீரைக்குடி எல்லைக்குத் தெற்கும் மேல்பாற்கெல்லை மேற்படி யூர் எல்லைக்கு கிழக்குந் தென்பாற்கொல்லை பையூர் சுடுகாட்டுக் குள......

குறிப்பு : இதற்கு மேல் இந்தச் சாசனம் மறைந்து கிடக்கிறது. திருச்சிற்றம்பலமுடையான் வேதவனமுடைமயான் மேல் பாடின கவியின் (பிரபந்தத்தின்) பெயர் தெரிய வில்லை.

உமையாள் நகைப்பு

இடம் : புதுக்கோட்டை, குளத்தூர் தாலுகா, குடுமியா மலை. அகிலாண்டேசுவரி அம்மன் கோவில், இரண்டாவது. கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் உள்ள சாசனம்.

பதிப்பு

(No. 1092. I. P. S.)

புதுக்கோட்டை சாசனங்கள்,

எண்

1092

விளக்கம் : உமையாளை இடது புறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வம்மையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியாமலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடாமுடி குறைந்து சிறுகுடுமியாய்விட்டதாம். அதைக்கண்டு உமையம்மையார், "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப்போகிறார்!” என்று கூறி நகைப்பதாக இச்செய்யுள் நயம்படக் கூறுகிறது. இந்தச் செய்யுளை இயற்றியவர் ஆதிநாதர் என்பவர்.