பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

119

பதிப்பு : தமிழ் வடமொழிச் சாசனங்கள், பக்கம் 59. (Tamil and

Sanskrit Inscriptions. P.59.)

விளக்கம் : சக ஆண்டு 1530-இல் (கி.பி. 1608) இராமேசுவரக் கோவிலில் திருப்பணியை இராமநாத முனிவர் செய்து முடித்ததைக் கூறுகிறது.

சாசனச் செய்யுள்

பற்றுஞ் சகனிற் பதினைந்து நூற்று முப்பான் மருவ நற்றும் புவியினையாள் வீசுபூபதி நாளிற் றொண்டர் குற்றங் கடிந்த வரராம நாயகர் கோயிலன்பான்

முற்றுந் தவங்கள் புரி ராமநாதன் முடித்தனனே.

குறிப்பு :- பதினைந்து நூற்று முப்பால் - ஆயிரத்து ஐந்நூற்று முப்பது. இராமநாதன் இராமநாத பண்டாரம் என்னும் இராமநாத முனிவர்.

இராமநாத முனிவர்

இடம் : இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம் கோவில், இரண்டாம் பிராகாரம், கோடிதீர்த்தத்தின் மேற்குப் புறத்துச் சுவரில் உள்ள சாசனம்.

பதிப்பு : தமிழ் வடமொழிச் சாசனங்கள், பக்கம் 59. (Tamil and Sanskrit Inscriptions. P.59.)

விளக்கம் : சக ஆண்டு 1530-இல் (கி.பி. 1608-இல்) இராமநாத முனிவர் இந்தக் கோவிலை கற்றளியாகக் கட்டியதைக் கூறுகிறது. சாசனச் செய்யுள்

திருமா லரனுக் கபிடேகஞ் செய்யச் சிலையதனால் வருமாறு கண்ட வண்கோடிப் புனற்கு மகாலயத்தைத் தருமாயிரத் தைஞ்ஞூற்று முப்பான் செல்சகன் வருடத் தருமா தவஞ்செய் முனிராம நாத னமைத்தனனே.

குறிப்பு :- இரண்டாம் அடியில், "கோடிப் புனற்கு மகாலயத்தை” என்றிருப்பதை "கோடிப் புனற்கண் மகாலயத்தை" என்றும் படிக்கலாம்.