பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

145

குறிப்பு மூன்றாம் அடியில், சிங்கை நகர் ஆரியன் என்பது சிங்கை ஆரியச் சக்கரவர்த்தியை. அனுரேசர் அனுரை நகரின் அரசர். அனுரை என்பது அநுராதபுரம். இது இலங்கைத் தீவின் பழைய தலைநகரம். இந்நகரில் இலங்கை அரசர்கள் அரசாண்டார்கள்.

தன்மபாலன்

இடம் : இலங்கைத் தீவின் பழையகாலத்துத் தலைநகரமான அநுராதப்புரத்தில், ஆர்க்கியாலஜி சர்வே அலுவலகத்தில் வைக்கப் பட்டுள்ள பழைய கல்லெழுத்துச் சாசனம்.

பதிப்பு: தென் இந்திய சாசனங்கள், தொகுதி நான்கு : எண். 1405. (No. 1405. S. I. I. Vol. IV. )

விளக்கம் : இந்தச் செய்யுளின்மேலே ஒரு வடமொழிச் செய்யுளும், அதற்கு மேலே, இடையிடையே எழுத்துக்கள் மறைந்து போன ஒரு தமிழ்ச் செய்யுளும், அதற்குமேலே சாசன வாசகமும் எழுதப்பட்டுள்ளன. எழுத்துக்கள் மறைந்து சிதைந்துள்ள செய்யுளை இங்கு எழுத வில்லை.

சாசனச் செய்யுள்

போதி நிழலமர்ந்த புண்ணியன்போ லெவ்வுயிர்க்குந் தீதி லருள்சுரக்குஞ் சிந்தையா - னாதி

வருதன்மங் குன்றாத மாதவன் மாக்கோதை

ஒருதன்ம பால னுளன்.

குறிப்பு இந்தச் செய்யுள், மாக்கோதை தன்பாலர் என்னும் பௌத்த பிக்குவைப் புகழ்ந்து கூறுகிறது. போதி நிழல் அமர்ந்த புண்ணியன் அரசமரத்தின் கீழே எழுந்தருளியுள்ள புத்தர் பெருமான்.