பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

151

105 சோமாசி குறிச்சியிது தொல்லைமேற்படி கிடந்ததனை ஸோமபான மநோசுத்தராகிய காடகசோம் யாஜியார்க்கு யாகபோக மதுவாக எழிற்செப்பேட் டொடுகுடுத்தனன் ஆகியஇவ் வூரிரண்டின் செப்பேடு மறக்கேட்டில் இழந்துபோ யினவென்றும் ஏதமில்சோ மாசிகுறிச்சிச் 110 செழுந்தரைய நிலத்துப்படும் நிலத்தைக் கடன்றிருக்கைய கீழ்வன மணிதருபெரு நான்கெல்லை இட்டுக்கொண்டு மற்றதனை மதுரகர நல்லூரென்று பேரிட்டுக் குடிநிலனா கக்கொண்ட நிலமதுவும் அவகூடி நிலனாகேய்ந் தவிரயிது தொண்டுசோ மாசிகுறிச்சி 115 மேலைபுரவேற்ப பெ(று)வதென்றும் சொல்லியவூ

ரிரண்டுந்தம்பி லெல்லைகலந்து கிடக்குமாதலில் ஒன்றாக வுதவுமென்றும் வாசநாள் மலர்கமழ்பொழில் லாசிநாட்டுள் .....மாகிய கருவமைந்த கனகமாளிகைத் திருமங்கல நகர்த்தோன்றல் சோமாசி குறிச்சிஎன்னுங் காமர்வண் பதிகாவலன் 120 வடிவமைவான கோத்திரத்து பௌதாயன சூத்திரத்துக் குடியினனாக வெளிப்பட்டு குணகணங்கட் கிடமாகி மறைநான்கின் துறைபோகிய மாயானமவி பட்டற்குச் சிறுவனாகிய பெருந்தகைஓன் றிசைமுகன்வெளிப்

தர்ம்ம வத்சலன்,

125 மாயநாரா யணபட்டர் மஹாபந்தி வயிறுயிர்த்த

பட்டனையன்

சேயான திருத்தகைஓன் ஸ்ரீநாராயணங் கேசவன் கல்விக்கடல் கரைகண்டு மக்ஷத்தியான மதமுணர்ந்து சொல்வித்தகந் தனதாக்கி சத்சீலா சாரனாகி மீனவள்வீர நாரணற்கு விஸ்வாச குணங்கட்

130 கானதன்மைய னாதலில்லரு ளறிந்துவிண் ணப்பஞ்செய மதுரதர தரநாணுஎனும் வளம்பதிசோ மாசிகுறிச்சி அதன்மேலே புரவேற்றி ஆங்கதுந்திரு மங்கலமும் உடன்கூடப் பிடிசூழ்வித் துலகறியக் குடுத்தருளினன் வடங்கூடு முலைமகளிர் மன்மதவேள் மனுசரிதன்