பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

மூன்றின் னிடைக் கிடந்ததொன் னிலமுழுவதும் இல்லவளா லதுவாகவும் எழின்மிக்க தோட்டமாகவும் 220 பால்லெருமை பெருவராலுகள் புனற்பதி இதனிற்

155

கோல்லுரிமையிற்,

செம்பாகமும் மஹாசபை குறிப்பொடு கொடுத்துப் பகல்செய்யும் பருதிஞாயிறும் இரவுச் செய்யும்

பனிமதிஉம்

அகல்ஞாலமும் உளவளவும் செப்பேடுசெய்து

கொடுத்தருளினன்

225 மணிநீழ்முடி மன்பணிகழல் வசுழாதிப வாசுதேவன் அணிநீள வுய்த்தஹிதாகனி அசலாசலன் நவர்ஜ்யன் கொந்தலர்தார் கோச்சடையன் கூடற்கோன் குருசரிதன் செந்தமிழ்க்கோன் ஸ்ரீநிகேதனன் ஸ்ரீபராந்தக மகராஜன் தேர்மிகுமாக் கடற்றானைத் தென்னவர்கோன் றிருவருளாற் 230 சீர்மிகுசெப் பேட்டுக்குச் செந்தமிழ்ப்பாத்

தொடைசெய்தோன் கிர்தஉகமெனும் ஊழிக்கண் அவிர்சடைமுடி அரன்வேண்ட நற்பரசு நிர்ம்மித்தவ னளிர்சடைமே லலங்கல்பெற்ற மாமுனிவன் வழிவந்தோன் பாமருபண் டிதராசன்

பொன்வரன்றி மணிவரன்றி அகில்வரன்றிக் கரைபொருபுனற் 235 றென்வைய்கை வளநாடன் செழுங்குண்டூர் நகர்த்தோன்றல் பாண்டித்தமி ழாபரண னென்னும்பல சிறப்புப் பெயரெய்திய பாண்டிமா ராயப்பெருங் கொல்லனாகிய சீரிவல்லவன். தென்னவர்தந் திறலாணைச் சிலைஓடுபுலி கயலிணைமன் பொன்னிமையச் சிமையத்து விறற்கருவி இற்றைக்குந் 240 தொழில்செய்து வந்தவர்பின் னோன்செயல்பல பயின்றோர் முன்னோன்

திருமலிசாசன மிதற்குச் செழுந்தமிழ்பா டினோனற்றை நிருபசேகரப் பெருங்கொல்லன் நீள்புகழ் நக்கனெழுத்து.

குறிப்பு :- அடி 48. களப்பாழர் என்பது களப்பாளர் என்பதன் திரிபோலும். களப்பாழர் அல்லது களப்பாளர் என்பவர் களப்பரர் (களபரர்) என்னும் அரசரைக் குறிக்கிறது. கடைச் சங்க காலத்துக்குப்