பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

பின்னர், களபரர் என்னும் அரசர் வடக்கிலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்து சேர, சோழ, பாண்டியர்களைவென்று அரசாட்சியைக் கைக் கொண்டனர். சில காலத்துக்குப் பிறகு, கடுங்கோன் என்னும் பாண்டிய அரசன் வெளிப்பட்டுக் களபர அரசனை வென்று மீண்டும் பாண்டியர் ஆட்சியை நிறுவினான். இதைத்தான், “கடிநாறு கவினலங்கற் களப்பாழர் குலங் களைந்தும்” என்று இச்சாசன அடி கூறுகிறது. இச்செய்தியையே 95, 96 -ஆம் வரிகளில், “களப்பாழரைக் களைகட்ட மல்திரள்தோள் மாக்கடுங்கோன்" என்று மீண்டும் இச் சாசனம் கூறுகிறது.

அடி 51. இதில் கூறப்படுகிற காடவன் என்பவன் பல்லவ அரசன் ஆவன்; இவன் இரண்டாம் நந்திவர்மனான பல்லவ மல்லன். இவனை வென்ற பாண்டியன் வரகுண மகாராசன் முதலாம் வரகுணன்).

இச்சாசனச் செய்யுளைப் பாடியவன் பண்டிதராசன், பாண்டித் தமிழாபரணன், பாண்டிமாராயப் பெருங்கொல்லன் என்னும் சிறப்புப் பெயர்களையுடைய சிரீவல்லபன் என்றும், அவன் வைகையாற்றங்கரையில் இருந்த குண்டூர் நகரத்தில் இருந்தவன் என்றும் 229 – 233- ஆம் அடிகள் தெரிவிக்கின்றன.

சிறப்புப்

இச் செப்பேட்டைச் செதுக்கியவன், நக்கன் என்னும் இயற் பெயரையுடைய நிருபசேகரப் பெருங்கொல்லன் என்னும் பெயரையுடையவன் என்று 238-ஆம் வரியினால் அறிகிறோம்.

124, 126, 161, 205, 234-ஆம் வரிகளில் பெருந்தகை ஓன், திருத்தகைஓன், அறிவறிஓன், மாசபைஓர், சிலைஒடு என்று எழுதப் பட்டிருத்தல் காண்க. இது சாசனம் எழுதியவரின் பிழைபோலும்.