பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

லிருந்து திருவமுது நெய்யமுது, பொரிக்கறி, மிளகுப்பொடி ஆகிய கறியமுது இரண்டு, தயிர் அமுது அடைக்காயமுது வெற்றிலையமுது முதலியவற்றுக்கு நிபந்தங்கள் செய்திருக்கிறார். மற்றும் தலைப்பறை கொட்டும் உவச்சன், திருப்பதிகம் பாடுவார், திருப்பள்ளித் தாமம் பறிப்பான், திருவலகும் திருமெழுக்கும் இட்டுப் பள்ளித்தாமம் தொடுப்பவள், ஸ்ரீகாரியஞ் செய்கிறவர்கள் முதலியோருக்கு நிபந்தங்கள் செய்திருக்கிறார். மற்றும் ‘கலசங்களும் சால்களும் குடங்களும் பெருந்திருவமுதுக்குப் பானைகளும் சட்டிகளும்' இடும் குசவனுக்கும், நிபந்தங்கள் செய்திருக்கிறார் (222. நி. த. இ. க. தொகுதி 17.)

இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். இந்தக் கோவிலைக் கருங்கல்லினால் கற்றளியாகக் கட்டி நிலங்களையும் பொன்னையும் வழங்கின இந்த அரசியார், பானை சட்டிகளில் திருவமுது செய்ய நிபந்தங்கள் செய்திருக்கிறார். சோழப் பேரரசியாகிய அவர் விரும்பியிருந்தால் பொன், வெள்ளி. வெண்கலப் பாத்திரங்களை வழங்கி இருக்கலாம். அப்படி இல்லாமல் மட்கலங்களை நியமித்து, அக்காலத்து வழக்கத்தைத் தெரிவிக்கிறது. அரசர்களுங்கூட அக்காலத்தில் மட்கலங்களையே சமைப்பதற்கு உபயோகித்தார்கள் என்பது இதனால் தெரிகிறது.

முதலாம் இராஜராஜனுடைய 29-ஆம் ஆட்சியாண்டில் எழுதப் பட்ட இன்னொரு சாசனம் இக்கோவிலில் இருக்கிறது. அது கி.பி. 1013 - 14 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. அது மாம்பாக்கம் உடையான் சாத்தன் ஆலை என்பவன் இந்தக் கோவிலில் நந்தா விளக்கு ஒன்று வைத்து, அவ்விளக்குக்கு நாள் தோறும் நெய் அட்டுவதற்காகத் தொண்ணூறு ஆடுகளைத் தானஞ் செய்ததைக் கூறுகிறது. அதாவது ஆட்டுப் பாலிலிருந்து நெய் எடுத்துத் திரு விளக்கு ஏற்றவேண்டும் என்று ஏற்பாடு செய்ததைக் கூறுகிறது. (195. தெ. இ. க. தொகுதி 17.)

இராஜேந்திரசோழன் (முதலாமவன்) ஏழாம் ஆட்சியாண்டில் (கி.பி. 1018) நந்தி வர்மன் என்பவன் திருநந்தா விளக்கு ஒன்று இக்கோயிலுக்கு வைத்தான். விளக்கு எரியும் நெய்க்காகத் தொண்ணூறு ஆடுகளையும் கோயிலுக்குத் தானம் செய்தான். இதனை இன்னொரு சாசனம் கூறுகிறது. (197. தெ. இ. க. தொகுதி 17.)