பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

திசை விளங்கு திருவாசல் பொற்கதவு

சமைத்தான் வென்றி

திசைவிளக்கு வேற்கண்டன் துருவ்வைகோன் வழிக்கரிசி மடந்தை கோவே.

இந்த சாசன எழுத்து, கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் எழுதப் பட்டதாகத் தோன்றுகிறது.

சோழ அரசனான இரண்டாம் இராஜதிராஜனால் ஏழாம் ஆட்சியாண்டில் (கி.பி. 1169), திருவக்கரைக் கோயிலின் கோபுரம் கட்டப்பட்டது. இதற்கு முன்னர்க் கோபுரம் இல்லை என்று தோன்றுகிறது. இந்தக் கோபுரத்தைக் கட்டினவன் அம்மையப்பன் பாண்டி நாடு கொண்டானான கண்டர் சூரியன் சம்புவராயன் என்பவன். இந்தச் சாசனத்தின் வாசகம் இது :-

66

ஸ்வஸ்திஸ்ரீ. திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீஇராஜதிராஜ தேவர்க்கு யாண்டு ஏழாவது திருவக்கரை ஆளுடையார் கோயிலில் திருக்கோபுரம், கண்டர், சூரியன் திருக்கோபுரம் என்னும் பெயரால் செய்வித்தான் அம்மையப்பன் பாண்டி நாடு கொண்டானான கண்டர் சூரியன் சம்புவராயன்” (217).

இந்த சம்புவராயனே இத்திருக்கோவிலில் ஆயிரக்கால் மண்டபத்தையுங் கட்டினான். இந்த மண்டபம் மூன்றாங் குலோத்துங்க சோழனுடைய இரண்டாவது ஆண்டில் (கி.பி. 1179) கட்டப்பட்டது. இந்த சாசனத்தின் வாசகம் இது :-

"ஸ்வஸ்திஸ்ரீ.

திரிபுவனச் சக்கரவர்த்திகள் மதுரையும் பாண்டியன் முடித்தரையுங் கொண்டருளின, ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 2-வது. இராஜராஜ வள நாட்டு மாத்தூர் நாட்டு உடையார் திருவக்கரை ஆளுடையார் கோயிலில் இத்திருமண்டபம் கண்டர் சூரியன் திருமண்டபம் என்னும் பெயரால் செய்வித்தான் அம்மை அப்பன் பாண்டிநாடு கொண்டானான கண்டர் சூரியன் சம்புவராயன் (212).

மூன்றாம் குலோத்துங்க சோழனின் பதினாறாவது ஆண்டில் (கி.பி. 1194) எழுதப்பட்ட இன்னொரு சாசனம். இந்தக் கோவிலில் நான்கு நந்தாவிளக்கு தானங்கொடுத்ததைக் கூறுகிறது. தானங்கொடுத்தவர் ஒரு காடவராயர். “இத்திரு நந்தாவிளக்கு நாலுக்கும் விட்ட சாவா