பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

163

இந்தச் செய்திகளையெல்லாம் திருவக்கரைத் திருக்கோயிலில் எழுதப்பட்டிருக்கிற கல்வெட்டுச் சாசனங்களிலிருந்து அறிகிறோம். கல்லில் எழுதிவைக்காமலிருந்தால் இவைகளை நாம் எங்ஙனம் அறிய முடியும் ?

திருக்கோயில்களில் திருவிளக்கு ஏற்றினால் ஞானம்பெறலாம் என்பது ஆன்றோர் வாக்கு. திருவிளக்கு இடுவது பெரும் புண்ணிய மாகக் கருதப்படுகிறது. திருவிளக்கேற்றிக் கடவுளை வணங்கினால் கடவுள் திருவருள் கிடைக்கும்.

விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினால் இடவல்லார்க்குக் கரும்பினிற் கட்டிபோல்வார் கடவூர் வீரட்டனாரே.

என்று திருநாவுக்கரசு சுவாமிகள் கூறுவது காண்க.

முற்காலத்துப் பெரியவர்கள் எண்ணெய் விளக்கேற்றுவதை விட, நெய் விளக்கு ஏற்றுவதை உயர்வாக மதித்தார்கள். (இதனால் எண்ணெய்விளக்கு கூடாது என்பதன்று). இதனால்தான் அக்காலத்தவர் வசதியிருந்த போது திருக்கோயில்களில் நெய்யினால், திருவிளக்கு ஏற்றினார்கள். அதற்காக ஆடுகளையும் பசுக்களையும் திருக்கோயில் களுக்குத் தானம் கொடுத்தார்கள். செல்வர்கள் அக்காலத்தில் பசுக்களையும் அடுகளையும் திருக்கோயில்களுக்குத் தானஞ்செய்து, அவற்றின் பாலிலிருந்து கிடைக்கிற கலப்பற்ற நெய்யினால் திருவிளக்கேற்ற நிபந்தங்களைச் செய்தார்கள். இச் செய்திகளைக் கல்வெட்டெழுத்துக்களிலிருந்து அறிகிறோம்.