பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

உருவம்

மூர்த்தமாக அமர்ந்திருக்கிறார். நாண் ஏற்றிய வில்லைத் தரையில் ஊன்றி அதை இடதுக் கையினால் பிடித்திருக்கிற இவர், வலது கையிலே அம்பு ஒன்றை ஏந்திக் கொண்டிருக்கிறார். கூர்மையான அம்பின் தலைப் புறம் கீழ்நோக்கியும், இறகுகளுடன் கூடிய வால்புறம் மேல் நோக்கியும் இருக்கிறது. அம்பின் சிறகுகளின் மேலே அக்கினித் தேவனின் உருவம், மிகுந்த கோபத்துடன் காட்சியளிக்கிறது. அம்போடு சேர்ந்தாற் போல அக்கினித் தேவனின் காணப்படுகிற போதிலும், அக்கினி தேவன் அம்புடன் இணைந்திருக்க வில்லை. இந்த அம்பு சாதாரண அம்பு அன்று தீயைக் கக்கும் “எரிமுகப் பேரம்பு” என்பதைக் காட்டுவதற்காகவே அம்புடன் சேர்ந்திருப்பது போலத் தீக்கடவுளின் உருவத்தை அமைத்திருக்கிறார், இந்த உருவத்தை அமைத்த சிற்பக் கலைஞர்! தீக்கடவுளின் முகத்தைச் சூழ்ந்து தீச்சுடர் அனலைக் கக்கிக் கொண்டு எரிகிறது. தீக்கடவுளின் கண்களும், கோரைப் பற்களும் அவர் சினங்கொண்டு சீறுவதைக் குறிக்கின்றன. “இதோ எரித்து விடுகிறேன் பார்” என்று சினத்தினால் துடித்துக் கொண்டிருப்பது போலத் தீக்கடவுளின் அமைந்திருக்கிறது. சிவபெருமான் கையிலுள்ள அம்பு, அனலைக் கக்கும் எரிமுக அம்பு என்பதைத் தெரிவிப்பதற்காகத் தீகடவுளின் உருவத்தை அம்புடன் சேர்த்துச் சிற்பக் கலைஞர் சித்தரித்துக் காட்டியுள்ளார். சிவபெருமான் எரிமுகப் பிழம்பினால் திரிபுரத்தை எரித்தார் என்று சாசனம் கூறுகிறது.

"திரிபுரம் எரியத் தேவர் வேண்ட எரிமுகப் பேரம்பு ஏவல் கேட்ப”

என்று சிலப்பதிகார காவியம் கூறுவது காண்க.

உருவம்

சிவபெருமான் திரிபுரம் எரித்ததை, மாணிக்கவாசகர் தாம்

அருளிய திருவுந்தி ஊரில் அழகாகக் கூறுகிறார்.

66

'வளைந்தது வில்லு விளைந்தது பூசல்

உனைந்தன முப்புரம் - உந்தீபற

G

ஒருங்குடன் வெந்தவாறு -உந்தீபற

ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தம் கையில்

ஓரம்பே முப்புரம் - உந்தீபற

ஒன்றும் பெருமிகை - உந்தீபற'