பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

வைத்திருக்கும் ஓர் ஆயுதம்! இது சிவபெரு மானுக்கே உரியது. அப்பர் சுவாமிகளின் தேவராத்தில் இது குறிக்கப் படுகிறது. பல்லவர்கள் காலத்துச் சிற்ப உருவங்களில் இது சாதாரணமாகக் காணப்படுகிறது. கட்டுவாங்கத்தைச் சுற்றிக் கொண்டு ஒரு நாகப்பாம்பு படமெடுத்து ஆடுவதை இடது கைக்குக் கீழே காண்க.

சிவபெருமானுக்கு இடது புறத்தின் மேலே இன்னொரு முத்தலை நாகம் படமெடுத்து ஆடிக்கொண்டிருக்கிறது. நஞ்சுண்டவ ராகிய சிவபெருமானுக்கு நாகப்பாம்புகள் உகந்த அணிகலன்களாக உள்ளன என்று சாத்திரங்கள் கூறுகின்றன.

அம்பையும் மழுவையும் பிடித்திருக்கிற விரல்களின் அமைப்பைப் பாருங்கள். இவற்றைக் கல்லில் அமைத்தச் சிற்பக் கலைஞரின் நுண்ணறிவை இவை புலப்படுத்துகின்றன.

திரிபுராந்தகமூர்த்தி அவுணர்களின் முப்புரங்களை எரிமுகப் பேரம்பினால் எய்து எரியச் செய்து அழித்தார் என்பது புராணக் கதை. இது பாமர மக்களுக்காகக் கூறப்படுவது. இதற்குச் சாத்திரக்கருத்தும் உண்டு. அது சைவ சித்தாந்தக் கருத்து இக்கருத்தைத் திருமூல நாயனார், தமது திருமந்திரப்பாட்டு ஒன்றில் நன்றாக விளக்கிக் கூறுகிறார்.

“அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்

முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள் முப்புர மாவன மும்மல காரியம்

அப்புரம் எய்தமை யார் அறிவாரே”

என்பது அச்செய்யுள்.

கருங்கல்லிலே புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ள இந்த அருமையான சிற்பம், ஏறத்தாழ மூன்று அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் உள்ளது.

இது அமைக்கப்பட்ட காலம் எது என்பதை ஆராய்வோம். சிவபெருமான் அமர்ந்திருக்கிற ஆசனத்தின் அமைப்பையும், அவர் அணிந்திருக்கிற ஆடை ஆசனத்தின் மேலே தொங்கிக் கொண்டிருக்கிற அமைப்பும், பல்லவ அரசர் காலத்துச் சோமாஸ் கந்த மூர்த்தியின் அமைப்புப்போலக் காணப்படுகின்றது. மேலும் இவர் அணிந்திருக்கிற