பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

177

கடற்கரை ஓரமாக இருந்த காயல்களின் ஊர்களும் இருந்தன. பிறகு கடல் பெருக்கெடுத்து காயலில் புகுந்து பெரியதோர் ஏரியாக மாறிவிட்டது. பழவேற்காட்டு ஏரியின் நீளம் ஏறக்குறைய 37 மைல். அகலம் சில இடங்களில் 11 மைல். சில இடங்களில் 3 மைல். சென்னைப் பட்டினத்துக்கு வடக்கே 14 மைல் தூரத்தில் எண்ணூார் என்னும் ஒரு ஊரில் ஒரு காயல் இருக்கிறது. சென்னை சாக்ரின் பேசினிலிருந்து ஒரு கால்வாய் 1802-இல் வெட்டி இதனுடன் இணைக்கப்பட்டது. பிறகு எண்ணூர் காயலிலிருந்து 154 ஆண்டு களுக்கு முன்பு 1806-இல் கந்தப்பிள்ளை கால்வாய் என்னும் ஒரு கால்வாய் வெட்டி பழவேற்காட்டு ஏரியுடன் இணைக்கப்பட்டது படகு போக்குவரத்துக்காக.

பழவேற்காட்டு ஏரியை 'கடல் கொண்ட சகாகதிநாடு' என்று ஒரு சாசனம் கூறுகிறது. (காகந்தி - காவிரிப்பூம்பட்டினம். பூம்புகார்)

திருப்பாலைவனம், பழவேற்காடு இரண்டும் செங்கற்பட்டு மாவட்டத்தின் பொன்னேரி தாலுகாவில் உள்ளன. இந்த மாவட்டத்தின் பழைய பெயர் பையூர்க் கோட்டம் என்று கூறப்படுகிறது. பையூர்க் கோட்டத்தின் வடக்கே பையூர் இளம் கோட்டம் என்னும் ஒரு கோட்டம் கூறப்படுகிறது சாசனங்களில். பையூர்க் கோட்டமும் பையூர் இளங்கோட்டமும் ஒரே கோட்டங்களா என்பது ஆராய்ச்சிக்கு உரியது.

பண்டைக்காலத்திலே தொண்டைமண்டலம் 24 கோட்டங் களாகப் பரிக்கப்பட்டிந்தது. சோழ, பாண்டி, சேர நாடுகளில் கூற்றங்கள் இருந்தன. கோட்டமும் கூற்றமும் ஒன்றே. ஒவ்வொரு கோட்டமும் இரு நாடுகளாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. அதாவது பல கிராமங்கள் சேர்ந்தது நாடு. சில நாடுகள் சேர்ந்தது கோட்டம் அல்லது கூற்றம். இவ்வாறு இருந்த பழய நிலப் பிரிவு ஆங்கிலேயர் காலத்தில் வேறு பெயர் பெற்றது. ஆங்கிலேயர் இந்நாட்டைக் கைப்பற்றி அரசாளத் தொடங்கிய போது, கர்நாடக நவாப்பு குடும்பத்தை சேர்ந்த ஒருவரை, ஆட்சி செய்வதற்கு எளிதாக நாட்டைப் பிரித்துத் தரும் படி கேட்டுக் கொண்டார்கள். கேட்டுக் கொள்ளப்பட்ட அந்த முஸ்லீம் உத்தியோகஸ்தர், பிர்க்கா, தாலுகா, ஜில்லா என்று பிரித்துக் கொடுத்தார். அதன் படியே ஆங்கிலேயர் பெயரிட்டு ஏற்றுக் கொண்டார்கள். அக்காலம் முதல் பழைய கோட்டம், நாடு என்னும் பிரிவுகள் மறக்கப் பட்டு விட்டன. அவை இப்போது சாசனங்களில் மட்டும் காணப் படுகின்றன.