பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரகுண பாண்டியனின் கல்வெட்டு*

இரண்டாம் வரகுண பாண்டியன் கி.பி. 2ஆம் ஆண்டில் முடிசூடிப் பாண்டியநாட்டை அரசாண்டான். ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தவன். மிக்க சிவபக்தியுள்ளவன். இவன் காலத்துக்கு முன்னே (ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்புதான்), அப்பர் சுவாமிகளும் திருஞானசம்பந்த சுவாமிகள், தமிழ் நாடெங்கும் பக்தி இயக்கத்தைப் பரப்பிச் சைவ சமயத்தை வளர்த்துச் சென்றனர். இந்தப் பாண்டியனின் காலத்தில் பக்தி இயக்கம் மறைந்து விட வில்லை. அவன் காலத்திலே சுந்தரமூர்த்தி சுவாமி வாழ்ந்திருந்து, சமயப் பிரசாரம் செய்தனர். இவனுடைய காலத்தில் அரசியல் குழப்பங்கள் அதிகமாக இருந்தன. இவன் பகையரசருடன் பல போர்களைச் செய்ய வேண்டியவனாக இருந்தான். ஆனால் எந்தப் போர்களுக்கு இடையேயும், சிவ பக்தனான இவன் சைவத் தொண்டுகளைச் செய்துகொண்டிருந்தான். வரகுணனுக்கு சிவ லோகம் காட்டிய திருவிளையாடல் போன்ற சில திருவிளை யாடல்கள், இவன் காலத்தில் நிகழ்ந்ததாகத் தெரிகின்றது.

திருச்செந்தூரில் உள்ள முருகப் பெருமான் திருக்கோயிலில், வரகுணபாண்டியனுடைய நீண்ட கல்வெட்டுச் சாசனம் ஒன்று காணப்படுகின்றது. இவன் திருச்செந்தூர் முருகப் பெருமானுக்கு நித்தியக்கலைகளை அமைத்ததை, இந்தச் சாசனம் கூறுகிறது. 1400 பொற்காசுகளை, இவன் இந்தக் கோயிலுக்குத் தானம் செய்து, முதல் கெடாமல் அதன் வட்டிப் பாதியிலிருந்து நித்திய பூசை நடைபெற ஏற்பாடு செய்ததை இச்சாசனத்திலிருந்து கூறுகிறோம். இந்தப் பாண்டியனிடத்தில் காவலர்களாக இருந்த இருப்பைக்குடிக்கோன்! *திருக்கோயில்: செப், 1968.