பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

பாண்டியாதி ராசர் வரகுணதேவர்

திருமலை படாரர்க்குக்

183

கொடுத்த பொன் பாடிக்கல்லால்

125 கழஞ்சு.”

திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி வட்டம் திருவெள்ளறை என்னும் ஊரில் உள்ள ஜம்புநாதசுவாமி கோயில், பாறையைக் குடைந்தமைத்த குகைக் கோயிலாகும். இந்தக் கோயிலில் சிவலிங்க உருவமாக எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்குத் ‘திருவெள்ளறைத் திருவானைக்கல் பெருமானடிகள்’ என்பது பழைய பெயர். (வெள்ளறை - வெள்ளைக் கல்; அறை - கல், மலை. ஆனைக்கலம் என்பது அந்த மலையின் பெயர்.) இந்தத் திருக்கோயிலில் இரண்டு திருவிளக்குகளை எரிப்பதற்காக வரகுண மகாராசன் 120 கழஞ்ச பொன்னைத் தானஞ் செய்தான். இந்தப் பொன்னின் முதல் கெடாமல், இதன் வட்டித் தொகையிலிருந்து இரண்டு விளக்குகளை எரிப்பதற்கு இவன் நிபந்தம் செய்தான்.

இந்தச் சாசனத்தின் வாசகப் பகுதி இது :

“கோமாறஞ் சடையற்கு

யாண்டு நாலாவதற்கு

எதிர் ஒன்பதாவது விருச்சிக

ஞாயிற்றுத் திங்கட்கிழமை

பெற்ற அஸ்வதி முதலாக

தேவதானந் திருவெள்ளறைத் திருவானைக்கற் பெருமானடிகளுக்கு

பாண்டி மாராசர் ஆயின கோமாறஞ் சடையன் இரண்டு

நொந்தாவிளக்கு இரவும் பகலும்

எரிக்க அண்ட நாட்டு வேளான் கையில் விடுத்த பொன்

120 கழஞ்சு.'

இந்தச் சாசனத்தில் கூறப்பட்டுள்ள விருச்சிக ஞாயிற்றுத் திங்கட்கிழமை பெற்ற அஸ்வதி' என்னும் குறிப்பைக் கொண்டு கணித்தால், அந்த ஆண்டு கி.பி. 824, நவம்பர் மாதம் 7 ஆம் தேதி