பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமெழுக்குப் புறம்*

திருக்கோயில்களில் நாள்தோறும் திருமெழுக்கிட்டுக் கோமயம் கோசலம் தெளித்துத் தூய்மைப்படுத்துவது வழக்கம். இதற்குத் திருமெழுக்கு இடுதல் (மெழுகுதல்) என்று பெயர். திருமெழுக்குத் தொண்டினைச் சிலர் பக்தியின் பொருட்டு இலவசமாகச் செய்வர். இந்தத் தொண்டு நடை பெறுவதன் பொருட்டுச் செல்வந்தர் சிலர் நிலம் அல்லது பொருள் தானம் செய்வதும் உண்டு. இவ்விதத் தானத்துக்குத் திருமெழுக்குப்புறம் என்பது பெயர்.

திருநாவுக்கரசு சுவாமிகளின் திருத் தமக்கையாரான திலகவதியார், திருவதிகை வீரட்டானக் கோவிலில் திருமெழுக்குத் திருத்தொண்டினைச் செய்துவந்தார். அவர் பக்திகாரணமாக ஊதியத்தை விரும்பாமல், தாமாகவே இத்திருத்தொண்டினை நாள் தோறும் செய்துவந்தார்.

66

"புலவர்தன்முன் திருவலகு

பணிமாறிப் புனிறகன்ற

நலமலி ஆன் சாணத்தால்

நன்குதிரு மெழுக்கிட்டு

மலர்கொய்து கொடுவந்து

மாலைகளும் தொடுத்தமைத்துப்

பலர்புகழும் பண்பினால்

திருப்பணிகள் பலசெய்தார்."

என்றும்,

"சீறடியார் திருவலகும் திருமெழுக்கும்

தோண்டியம் கொண்டு

ஆறணிந்தார் கோயிலினுள்

அடைந்தவரைக் கொடுபத்தார்."

  • திருக்கோயில்: சனவரி, 1969.