பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

189

ஆத்திரையன் கிழவன் மெழுக்குப் புறமாக வைத்த நிலத்துக்குக் கீழ்பாற்கெல்லை உட்சிறு வாய்க்காலுக்கு மேற்கு, தென்பாற் கெல்லை புழுவாய்க்காலுக்கு வடக்கு, மேற்பாற் கெல்லை மெழுக்குப் புறத்துக் கிழக்கு வடபாற் கெல்லை மெழுக்குப்புறத்துக்கு வடவெல்லைக் கொத்தத்துக்கு தெற்கு நிலம் காணி அரைக்காணிச்

செய்.

இவ்வாறு திருமெழுக்கென்று நிலங்கள் தானம் செய்யப் பட்டிருந்தன. திருக்கோயில்களில் திருவுலகு இட்டுச் சாணநீர் தெளித்து மெழுகுவது மரபு. பசுவின் சாணத்தினால் மெழுகுவது தொன்று தொட்டுள்ள வழக்கம். கற்றரையல்லாத மண்தரைகளுக்குச் சாணநீர் மெழுகுவது மரபு. பசுவின் சாணத்தினால் மெழுகினால் பூச்சிகள் சேரா. மேலும் சிவபெருமானுக்கும் திருமாலுக்கும் முற்காலத்தில் பஞ்சகவ்வியம் (ஆனைந்து) அபிஷேகம் செய்யப்பட்டது என்பதைச் சாசனங்களும் தெரிவிக்கின்றன. பஞ்சகவ்வியம் என்னும் ஆன் ஐந்து என்பது, பால், தயிர், நெய், கோமயம் (சாணம்), கோமூத்திரம் என்பன.

திருக்கோயில்கள் மெழுகுவதற்குரிய சாணம் கன்று ஈன்று புனிறு நீக்கிய பசுவின் சாணமாக இருத்தல் வேண்டும் என்று கூறப்படுகிறது. “புனிறு அகன்ற நலமலி ஆன் சாணத்தினால்" திலகவதியார் திருமெழுக்குத் தொண்டு செய்தார் என்று பெரிய புராணங் கூறுவது காண்க.

அந்தக் காலத்துக் கோயில்களுக்கும், இந்தக் காலத்துக் கோயில் களுக்கும் வேறு பாடுகள் உண்டு. அக்காலத்தில் கோயில் தரை பெரும்பாலும் மண்தரையாக அல்லது செங்கல் தரையாக இருந்தது. அப்போது சாணத்தினால் மெழுக வேண்டியிருந்தது. இக்காலத்தில் கோயில் தரைகள் பெரும்பாலும் கருங்கல் தரையாக இருப்பதனால் சாணத்தினால் மெழுக வேண்டிய அவசியம் இல்லை. திருவலகிட்டு நீரினால் சுத்தம் செய்தால் மட்டும் போதும். இக்காலத்துக் கோயில்களில் நிகழ்கிற நடை முறையை அறியேன்.

கோயில்களையும் சுற்றுப் புறங்களையும், தூய்மையாகவும் அழகாகவும் வைத்திருக்க வேண்டுவது மிகமிக அவசியமாகும். கோயிலைக் கண்காணிப்போரும் கோயிலுக்குச் சென்று வழிபடு வோரும் இதில் கண்ணுங்கருத்துமாக இருக்க வேண்டும். காகிதம், தேங்காய் நார், வாழைப்பழத் தோல், பூக்கள் முதலிய பொருள்களைக்