பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேனவரை நாயனார் சாசனம்*

இலங்கையிலே கொளும்பு நகரத்துப் பொருட்காட்சி சாலையிலே ஒரு சாசனக்கல் இலங்கையின் தென்கோடியில் உள்ள காலி என்னும் ஊரிலிருந்து கொண்டு வரப்பட்டது. இந்தக் கல் 4 அடி 9 அங்குல நீளமும், 2 அடி 6 அங்குல அகலமும், 5 அங்கலக் கனமும் உள்ளது. இதிலே தமிழ், சீனம், பாரசீகம் என்னும் மூன்று மொழிகளில் சாசனம் எழுதப்பட்டுள்ளது.

(இந்தக் கல் கண்டெடுக்கப்பட்ட வரலாறு முதலியவற்றை J.R.A.S. (C.B.) Vol. XXII. P. 129-ல் காண்க. இந்தச் சாசனத்தின் மொழிப் பெயர்ப்பு முதலிய செய்திகளைப்பற்றி The Galle Trilingual Stone by Mr. E.W. Perera, Spolia zeylanica Vol. viii pp 122 ff. காண்க.)

சீன தேசத்துச் சக்கரவர்த்தி யுவுங்லோவின் 7-ஆம் ஆண்டில், இரண்டாம் மாதத்தில் இந்தச் சாசனங்கள் எழுதப்பட்டன. யுவங்லோ அரசன் கி.பி. 1403இல் ஆட்சிக்கு வந்தான்.

தேனவரை நாயனாரின் புகழைக் கேள்விப்ட்ட சீனத்து அரசன், தமது தூதத்களாகிய சிங்வோ, உவிங் சுவிங் என்பவர்களின் மூலமாகச் சில பொருள்களைக் காணிக்கையாக அனுப்பியதையும் அப்பொருள்களின் விபரத்தையும் இந்தத் தமிழ் சாசனம் கூறுகிறது. சீனமொழி சாசனத்தில் இந்தத் தூதர்களின் பெயர்கள் ச்சிங் ஹோ என்றும் வங் ச்சிங் லீன் என்றும் கூறப்படுகின்றன.

தமிழ் சாசனம் தேனவரை நாயனாரைத் தேனவரை ஆழ்வார் என்றும் கூறுகிறது. தெய்வங்களை நாயனார் என்றும், ஆழ்வார் என்றும், பட்டாரகர் என்றும் கூறுவது தமிழ் மரபு. சீனமொழி சாசனம், மேற்படி சீனத்து அரசன் புத்தர் கோவிலுக்கு அளித்த காணிக்கைப் பொருள்களைக் கூறுகிறது. பாரசீக மொழி சாசனம் மிகவும் சிதைந்து, அழிந்து காணப்படுகிறபடியால் யாருக்குக் காணிக்கைப் பொருள் *தமிழ்ப்பொழில், 34:11. 1958.