பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

4.அவன் மகன் வீரனான முசுகுந்தனாவான். அவனுக்கு, அரச லோகத்தின் சூடாமணி போன்ற வளபன் பிறந்தான். அவன் குலத்திலே, உலகம் முழுவதும் சிபி என்று புகழ் பெற்றவனும், மன்னர்களால் வணங்கப்பட்ட பாதங்களை யுடையவனும் ஆன புகழ்வாய்ந்த அரசன் பிறந்தான்.

5.தனக்கென வாழாப் பிறர்க்குரியாளனாக வாழ்ந்த நிறைந்த அறிவுள்ள அந்த அரசனுடைய குணங்களை, கவிகளில் சிறந்த வியாசன் இல்லாமல் வேறு யார்தாம் கூறமுடியும்?

6.இந்தக் குலமாகிய கடலுக்கு முழுநிலா போன்றவனும் பதினாறு கலைகளோடு கூடிய முழு நிலாவைப் போல எல்லாக் கலைகளுக்கும் உறைவிடமானவனும் ஆன சோழன் என்பவன் பிறந்தான் இவனுக்குப் பின், இவன் குலத்திலே பிறந்தவர்கள் எல்லோரும் இவனுடைய சோழன் என்னும் பெயரையே சூட்டிக் கொண்டார்கள்.

7.அதன்பிறகு எல்லாப் பகைவரையும் வென்ற ராஜகேசரி என்பவனும், அவனுக்குப் பிறகு பகைமன்னரின் நகரங்களை அழிப்பதில் ஊக்கமுள்ள பரகேசரி என்பவனும் பிறந்தார்கள்.

8.ராஜகேசரி, பரகேசரி என்னும் பெயர்கள் இந்த அரச குலத்தில் பிறந்தவர்களுக்கு மாறிமாறிச் சூட்டப்பட்டன.

9.இந்தக் குலத்திலே, அரசர்க்கரசனும் பகைவர்கள் எல்லோ ரையும் வென்றவனும் சூரியகுலத்தின் கொடி போன்றவனும் வெல்ல முடியாத காலனையும் போரிலே வென்று பெறமுடியாத காலகாலம் (மிருத்ஜியுத்) என்னும் பெயரைப் பெற்றவனுமாகிய சுரகு பிறந்தான்.

10. இவனுடைய குலத்திலே, பகை மன்னராகிய யானைகளுக்கு சிங்கம் போன்றவனாகிய புலிக்கொடியோன் (வியாக்கிரகேது) பிறந்தான். இக் குலத்தில், வல்லமையுடைய மன்னன் இரவலர்க்குக் கற்பகமரம் போன்ற பஞ்சபன் பிறந்தான்.

11.பகைமன்னருக்குக் காலனைப்போன்ற கரிகாலன் என்னும் அரசன் இக்குலத்திலே பிறந்தான். இவன் காவேரி ஆற்றிற்கு கரைகளைக் கட்டினான்.