பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

19. பராந்தகன், தன் பகைவரின் சேனைகளை வென்று புகழ் கொண்டு, அறநெறியில் நடந்து, நீர்சூழ்ந்த நிலவுலகத்தைக் காத்து விண்ணுலகஞ் சென்ற பின்னர், அவன் மகன் இராஜதித்தியன் ஆற்றல் வாய்ந்தவன், அரசர்களின் முடிகளால் தேயப்பெற்ற பாதங்களையுடையவன் - அரசாண்டான்.

20. சூரியகுலத்தின் அணியாக விளங்கிய அந்த வீரனான இராஜதித்தியன் சிறந்ததோர் யானையின்மேல் அமர்ந்து தன் கூரிய அம்புகளைத் திசை எங்கும் எய்து, அஞ்சாத கிருஷ்ணராஜனையும் போர்க்களத்திலே அவன் சேனைகளுடன் கலங்கச்செய்து, (கிருஷ்ண ராஜனுடைய) அம்புகளால் மார்பு பிளக்கப்பட்டு வானவூர்தி ஏறிமூவுலகமும் புகழ வீரசுவர்க்கம் சென்றான்.

6

21. வீரம் மிக்க இராஜதித்தியன் தாமரைபோன்ற முகமுள்ள தெய்வமகளிர்க்கு இன்பந்தரச் சென்ற பிறகு, அவனுடைய ஆற்றலும் புகழும் வாய்ந்த தம்பி கண்டராதித்தியன் பகை என்னும் காரிருளை ஓட்டி உலகத்தை அரசாண்டான்.

22. மதுராந்தகன் என்னும் மகனைப் பெற்றுக் காவேரி ஆற்றின் கரைமேல் தன்பெயரினால் ஒரு ஊரை உண்டாக்கி, கண்டராதித்தியன் விண்ணுலகம் சென்றான்.

23. அவன் விண்ணுலகம் சென்ற பிறகு, பகைமன்னராகிய காட்டுக்குப் பெருந் தீபோன்ற வீரனாகிய அரிஞ்சயன் உலகத்தை அரசாண்டான்.

24. அரிஞ்சயனுக்குப் பராந்தகன் பிறந்தான். இவன் வீரத்தில் முப்புரமெரித்தவனுக்கு நிகரானவன். பகைக்கூட்டங்களை அழித்தவன். தன் நல்ல குணங்களினாலே குடிமக்களை மகிழ்வித்து நிலவுலகத்தை அமைதி நிலவ அரசாண்டான்.

25. இவன், சேவூரில் கூர்மையான அம்புகளைத் தன் அழகான வில்லிலிருந்து திசை எங்கும் எய்தும் கூர்மையான வாளை வீசியும் பகைமன்னருடைய மலை போன்ற யானைகளிலிருந்து இரத்த ஆறுகளைப் பாயச் செய்தான்.

26. இந்த அரசன் ஆதித்தியன் என்றும் கரிகாலன் என்றும் பெயருள்ள மகனையும் சூரியகுலத்தின் சூடாமணிபோன்ற ராஜராஜன் என்னும் பெயருள்ள மகனையும் பெற்றான்.