பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

203

27. பராந்தகன் தேவலோகத்தை ஆளச்சென்ற பிறகு (இறந்த பிறகு) ஆதித்தியன் உலகத்தை அரசாண்டான்.

28. இளைஞனான ஆதித்தியன், மனுகுலத்தின் ஒளி போன்றவன், மதங்கொண்ட யானையோடு சிங்கக்குட்டி விளையாடுவது போன்று, வீர பாண்டியனுடன் இவன் போர் செய்தான்,

29. இவ்வரசர் தலைவன் விண்ணுலகஞ் சென்ற பிறகு, கண்டராதித்தியனின் மகன், மகேந்திரன் போன்ற வல்லமை மிக்க மதுராந்தகன் உலகத்தை அரசாண்டான்.

30. இந்த அரசன் தேவர்கள் உலகத்தை அரசாளச் சென்ற பிறகு, வீரம் மிக்க சோழர் குலத்தின் விளக்குப் போன்றவன், தன்னை வணங்கும் அரசர்களின் மணிமுடிகளால் தேயப்பெற்ற கால்களை யுடைய ராஜராஜன், ஆதிசேஷனைவிட ஒளியுள்ள தோளின்மேல் ஆட்சிப் பொறுப்பைத் தாங்கி உலகத்தை அரசாண்டான்.

31. இவ்வரசன், பாண்டிய துளுவ கேரள நாடுகளையும் சிம்மளேந்திரன் சத்தியாஸ்ரன் முதலியவர்களையும் தன் ஆற்றலி னால் வென்று, அவர்களுடைய யானைகளையும் குதிரைகளையும், மணிகளையும் அரசுகளையும் கைக்கொண்டு தன் புகழினால் பத்துத் திசைகளையும் விளங்கச் செய்தான்.

32. நாடுகளையெல்லாம் வென்று அரசர்களைத் தனக்குக் கீழடங்கிய பிறகு, மன்னர் மன்னனாகிய. இராஜராஜன், விண்ணுல கத்தில் இந்திரன் போன்று, தன் நகரத்தில் எல்லோரும் வணங்க பெற்றிருந்தான்.

33. சூரியன் தோன்றுகின்ற உதயகிரி வரையிலும், தென் கடல் வரையிலும், அஷ்டமலை வரையிலும், சிவபெருமான் இருக்கிற இமய மலை வரையிலும் உள்ள, தமது குடும்பத்தைக் காப்பாற்ற விரும்புகிற அரசர்கள், எல்லா இன்பங்களையும் துய்ப்பதற்காக நித்தியவினோத னுடைய தாமரை மலர் போன்ற பாதங்களை அடைக்கலம் புகுந்தனர்.

34. ஆற்றலுடையவனாயும் புகலிடமாயும் இருப்பதனாலே

அவன் பாதங்களையடைந்த அரசர்களும் உலகத்திலுள்ள

நல்லவர்களும் அவ்வரசனை வரம்பற்ற கொடைவள்ளல் ராஜாஸ்ரயன் என்று கூறுகிறார்கள்.